செய்திகள் :

``மான்களை வேட்டையாடவில்லை.. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கமுடியாது'' - சல்மான் கான் தந்தை விளக்கம்

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கான் 1998ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்கு சென்றபோது அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது. சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இது இன்னும் சல்மான் கானை துரத்திக்கொண்டிருக்கிறது. சல்மான் கான் வேட்டையாடியதாக கூறப்படும் அபூர்வ வகை மான்களை பிஷ்னோய் இன மக்கள் தெய்வமாக வழிபடுவதாக கூறப்படுகிறது. எனவே சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஜராத் சிறையில் இருக்கும் மாபியா லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்காக சல்மான் கானுக்கு பலமுறை கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் சல்மான் கானின் நெருங்கிய நண்பர் பாபா சித்திக்கை மும்பையில் கொலை செய்துள்ளனர்.

சல்மான் கான்

இதனால் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க சல்மான் கான் மன்னிப்பு கேட்கலாம் என்ற ஒரு கருத்து எழுந்துள்ளது. இது தொடர்பாக சல்மான் கானின் முன்னாள் காதலி என்று கூறப்படும் நடிகை சோமி அலியும் சல்மான் கானிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பா.ஜ.க எம்.பி. ஒருவரும் சல்மான் கான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் 5 கோடி ரூபாய் கொடுத்து பகையை தீர்த்துக்கொள்ளும்படி சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சல்மான் கானின் தந்தை சலீம் கான் தெரிவித்துள்ளார்.

சல்மான் கான் தந்தை சலீம் கான்

இது தொடர்பாக சலீம் கான் அளித்த பேட்டியில்,''எனது மகனிடம் உண்மையில் மான்களை வேட்டையாடியது யார் என்று கேட்டேன். அப்போது தான் மான்களை வேட்டையாடவில்லை என்றும், சம்பவ இடத்திலேயே தான் இல்லை என்றும் தெரிவித்தான். சம்பவம் நடக்கும்போது அங்கிருந்த காரில் கூட தான் இல்லை என்று என்னிடம் தெரிவித்தான். எனது மகன் என்னிடம் பொய் சொல்லமாட்டான். சல்மான் கான் விலங்குகளை கொல்லக்கூடியவர் கிடையாது. மாறாக விலங்குகள் மீது அன்பு செலுத்தக்கூடியவர். ஒரு கரப்பான் பூச்சியைக்கூட சல்மான் கான் கொன்றது கிடையாது. மன்னிப்பு கேட்பது என்பது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகும். சல்மான் கான் எந்த விலங்கையும் கொல்லவில்லை''என்று தெரிவித்தார்.

இதற்கிடையே பலத்த கொலை மிரட்டலுக்கிடையே சல்மான் கான் தனது பிக்பாஸ் படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார். பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் கூடுதலாக 60 பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

``நிறைய திருமணம் செய்து, திருமணத்தின் கடவுளாக வேண்டும்..'' - ஜப்பான் இளைஞரின் இலக்கு!

ஜப்பானின் ஹொக்கைடோவின் வடக்கு மாகாணத்தில் வசிப்பவர் ரியுதா வதனாபே. 36 வயதான இவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வாழ்ந்து வருகிறார். இவரின் பெரும் ஆசை... கனவு... திருமணத்தின் கடவுள் ஆக வேண்டும் ... மேலும் பார்க்க

1951-ல் காணாமல் போன சிறுவன்... 70 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்த மருமகன்.. நெகிழ வைத்த சம்பவம்!

70 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன மாமாவை, மருமகன் தேடி கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் அர்மாண்டோ அல்பினோ. இவர் பிப்ரவரி 21,1951 அன்று மாலை கலிபோர்ன... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாக குறையாத கரன்ட் பில்; வெளிவந்த உண்மை... அதிர்ந்துபோன வீட்டு உரிமையாளர்! - என்ன நடந்தது?

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கென் வில்சன் என்ற நபர் 15 ஆண்டுகளாக தனது பக்கத்து வீட்டுக்காரருக்கும் சேர்த்து மின்சார கட்டணம் செலுத்திக்கொண்டிருந்ததை சமீபத்தில் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளா... மேலும் பார்க்க

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்தஜாங்யாங்(Zhong Yang)குக்கு13 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒருமில்லியன்யுவான்(சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற... மேலும் பார்க்க