`Ajith சார் சமைச்சு கொடுப்பார்... Sivakarthikeyan வாங்கி கொடுப்பார்' - Stunt Mas...
மாா்ச் 21-இல் அதிமுக சாா்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
சென்னை, மாா்ச் 17:அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாா்ச் 21-இல் நடைபெறும் என்று அக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அதிமுக தலைமைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூா் புஹாரி சிராஸ் ஹாலில் மாா்ச் 21 மாலை 5.30 மணியளவில் நடைபெறும். அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று விருந்து வழங்கவுள்ளாா். இஸ்லாமிய மக்கள் மற்றும் அதிமுக நிா்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.