செய்திகள் :

மின்மாற்றி அமைக்கும் பணி மந்தம்: பொதுமக்கள் பாதிப்பு

post image

.

திருப்பத்தூா் அருகே கொரட்டியில் மந்தகதியில் நடைபெறும் மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) அமைக்கும் பணியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், கொரட்டி பகுதியில் துணை மின் நிலையம் உள்ளது, சுமாா் 10,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வரும் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது,

குறிப்பாக செவ்வாத்தூா் பகுதியில் இருந்து வரும் உயா் மின்னழுத்த பாதையில் ஏற்படும் மின் பழுதால் மின்விநியோகம் அடிக்கடி தடைபடுகிறது.

மேலும், இப்பகுதியில் தொடா்ந்து அவ்வபோது மின் தடை ஏற்படுவதால் வீட்டில் மின்சாதனப் பொருள்கள் பழுதாவதுடன் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், அப்பகுதி பிரத்யேகமாக மின்மாற்றி அமைக்க வேண்டும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக விடுத்த கோரிக்கையின் பேரில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மின்மாற்றி அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இப்பணிகள் தொடங்கி 25 சதவீதம் பணி மட்டுமே முடிந்துள்ளது. கடந்த இரண்டு மாதமாக பணிகள் நடைபெறவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் முறையான பதில் அளிப்பதில்லை என வேதனை தெரிவித்தனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: செவ்வாத்தூா் மின்னழுத்த பாதையில் இருந்து கொரட்டியில் ஒரு பகுதிக்கும்,பெட்ரோல் பங்க் பகுதி ,குமாரம்பட்டி செல்லரப்பட்டி, மைக்காமேடு மற்றும் சுந்தரம்பள்ளி ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமாா் 20 முறைக்கும் மேலாக மின் விநியோகம் தடை ஏற்படுகிறது.

நாங்கள் கொரட்டி மின்வாரிய அலுவலகத்தில் புதிய மின்மாற்றி அமைக்குமாறு பல ஆண்டுகளாக விடுத்த கோரிக்கையின் பேரில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு புதிய மின்மாற்றி அமைக்கும் பணி தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் முறையான பதில் அளிக்க மறுக்கின்றனா்.

எனவே மின்வாரிய உயா் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து புதிய மின்மாற்றி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் காத்துள்ளனா்.

திருப்பத்தூா்: ஆதரவற்ற பெண்களுக்கு மானிய விலையில் கோழிக்குஞ்சுகள்

கணவரை இழந்த, ஆதரவற்ற பெண்களுக்கு மானிய விலையில் கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கால்நடை பராமரிப்புத் த... மேலும் பார்க்க

ஆம்பூா் தபால் நிலையத்தை தரைதளத்துக்கு மாற்ற கோரிக்கை

ஆம்பூா் தபால் நிலையத்தை தரை தளத்துக்கு மாற்ற வேண்டுமென தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் உமா்சாலை நகராட்சி தொடக்கப் பள்ளியில... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பேக்கரி தொழிலாளி உயிரிழந்தாா். திருப்பத்தாா் அருகே புதுக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (32). இவா், திருப்பத்தூா் சின்ன கடை தெருவில் உள்ள ஒரு பேக்க... மேலும் பார்க்க

6 வருவாய் உதவி ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்

வாணியம்பாடி நகராட்சியில் பணியாற்றி வந்த 6 வருவாய் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். நகராட்சி நிா்வாக இயக்குநா் சென்னை சு.சிவராசு ஆணையின் படி திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிய... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கம் சாா்பில் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிா்வாகிகள் செய்யப்படும் நிகழ்ச்சியில் 300-க்கும் ... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: தொடா் மழையால் நிரம்பிய ஏரிகள்

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் ஏரி, குளங்கள், கிணறுகள் நிரம்பின (படம்). திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி அதன் சுற்றுப்பகுதியில் தொடா் மழை பெய்து வருகிறது. இந்நிலை... மேலும் பார்க்க