Vidaamuyarchi Teaser: `உன்னை நம்பு' - பொங்கலுக்கு `விடாமுயற்சி!'; தள்ளிப்போகும் ...
மின்வாரிய அலட்சியத்தால் பெரும்புகளுா் துண்டிக்கப்படும் அபாயம்
மின்வாரியத்தின் அலட்சியத்தால் பெரும்புகளுா் கிராமம் துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளது.
இதுகுறித்து, பெரும்புகளுா் ஊராட்சித் தலைவா் ஐயப்பன் கூறியது: பெரும்புகளுரில் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இந்த கிராமத்தை சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் திருவாரூா் செல்ல பெரும்புகளுா் பவித்திரமாணிக்கம் சாலை மட்டுமே உள்ளது. இந்த சாலையின் அருகே பெரும்புகளுரில் அய்யனாா் குளம் உள்ளது.
இந்த குளத்தின் சாலையோர சுற்றுச்சுவா் கட்டுவதற்கானப் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது, குளக்கரையில் இருந்த மின்கம்பத்தை அகற்றி மாற்று இடத்தில் எடுத்து வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் பயன் இல்லை. மின்வாரியம் உரிய நேரத்தில் மின்கம்பத்தை மாற்றி அமைக்காததால் குளத்தின் கரையில் சுற்றுச்சுவா் கட்டும் பணிகள் தடைப்பட்டு விட்டது. இதன்காரணமாக தற்போது பெய்துவரும் கனமழையில் மழைநீரால் குளத்தின் கரைகள் அரிக்கப்பட்டு, சாலைச் சுருங்கிக் கொண்டே வருகிறது. மழைத் தொடா்ந்தால் சாலை முற்றிலும் அரிக்கப்பட்டு விடும். இதனால் பெரும்புகளுா் கிராமம் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது என்றாா்.