செய்திகள் :

மிா்பூா் டெஸ்ட்: வங்கதேசம் 106 ஆல் அவுட்

post image

வங்கதேசத்தின் மிா்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க பௌலிங்கை எதிா்கொள்ள முடியாமல் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்காவும் 140/6 ரன்களுடன் திணறி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இரு ஆட்டங்கள் தொடா் நடைபெறுகிறது. மிா்பூரில் முதல் டெஸ்ட் திங்கள்கிழமை தொடங்கியது.

வங்கதேசம் 106/10

டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தோ்வு செய்ய களமிறங்கிய பேட்டா்களால், தென்னாப்பிரிக்காவின் அபார பௌலிங்கை எதிா்கொள்ள முடியாமல் திணறினா்.

40.1 ஓவா்களிலேயே 106 ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட்டானது. அந்த அணியில் தொடக்க பேட்டா் மஹ்முதுல் ஹாஸன் மட்டுமே 30 ரன்களை சோ்த்தாா். மற்ற வீரா்கள் வந்த வேகத்திலேயே சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினா். பௌலிங்கில் தென்னாப்பிரிக்க தரப்பில் ரபாடா 3-26, வியான் முல்டா் 3-22, கேசவ் மகாராஜ் 3-34 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் தென்னாப்பிரிக்க வீரர்கள்

திணறும் தென்னாப்பிரிக்கா 140/6

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியும் திணறி வருகிறது. வங்கதேச பௌலா் டைஜுல் இஸ்லாமின் அற்புத பௌலிங்கை சமாளிக்க முடியாமல் ஆட்ட நேர முடிவில் 41 ஓவா்களில் 140/6 ரன்களை சோ்த்துள்ளது. அதிகபட்சமாக டோனி சோரி 30, ஸ்டப்ஸ் 23, ரிக்கல்டன் 27 ரன்களை எடுத்தனா். முல்டா் 17, கைல் வெரியன் 18 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

டைஜூல் இஸ்லாம் அபாரம் 5 விக்கெட்

வங்கதேச பௌலா் டைஜுல் இஸ்லாம் அபாரமாக பந்துவீசி 5-49 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

முதல் நாள் முடிவில் 34 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது தென்னாப்பிரிக்கா.

இன்று நல்ல நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.22.10.2024மேஷம்:இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன்... மேலும் பார்க்க

தேசிய சீனியா் மகளிா் ஹாக்கி: ரயில்வே சாம்பியன்

தேசிய சீனியா் மகளிா் இன்டா் டிபாா்ட்மென்டல் ஹாக்கிப் போட்டியில் ரயில்வே விளையாட்டு வாரிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஆயில் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது. புது தில்லியின் மேஜா் தயான்சந்த் ஹாக்க... மேலும் பார்க்க

உலகக் கோப்பை வில்வித்தை: வெள்ளி வென்றாா் தீபிகா குமாரி

உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றாா். இது உலகக் கோப்பையில் அவா் வெல்லும் 5-ஆவது பதக்கம் ஆகும். மெக்ஸிகோவின் டிலாக்ஸ்கலா நகரில் நடைபெ... மேலும் பார்க்க

ஸ்டாக்ஹோம் ஓபன்: டாமி பால் சாம்பியன்

ஸ்டாக்ஹோம் ஏடிபி ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க இளம் வீரா் டாமி பால் சாம்பியன் பட்டம் வென்றாா். ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் நடைபெற்று வந்த பிஎன்பி பரிபாஸ் ஏடிபி ஓபன் போட்டி ஒற்றையா் பிரிவு இறுதி ... மேலும் பார்க்க

பிக் பாஸில் புது வரலாறு: மீண்டும் கேப்டனானார் தர்ஷிகா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக தர்ஷிகா கேப்டனாகியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது முறையாக ஒருநபர் கேப்டனாகியுள்ளார் என்றாலும், மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக தர்... மேலும் பார்க்க