மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவு; விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது- தாராபுர...
முதல் டி20: 135 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டம்புல்லாவில் இன்று (நவம்பர் 9) நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: விராட் கோலியின் ஃபார்மை வைத்து அவரை மதிப்பிடாதீர்கள்: ரிக்கி பாண்டிங்
135 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. அந்த அணி இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் ஸகாரி ஃபோல்க்ஸ் தலா 27 ரன்கள் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, வில் யங் 19 ரன்களும், கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 16 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நுவான் துஷாரா, வனிந்து ஹசரங்கா மற்றும் மதீஷா பதிரானா தலா இரண்டு விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: சஞ்சு சாம்சன் அதிரடியின் பின்னணியில் சூர்யகுமார் யாதவ்!
136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.