முத்தம் கொடுத்து வரவேற்ற ரசிகை; லண்டன் சென்ற சிரஞ்சீவி நெகிழ்ச்சி... வைரல் புகைப்படம்!
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இந்தியா முழுக்க ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் ஒரு அரசியல்வாதியும் ஆவார்.
இதற்கிடையில், சமுதாயத்திற்கு சிறப்பாக பங்காற்றியதற்காக, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிரஞ்சீவிக்கு நாளை பாராட்டு விழா நடைபெற உள்ளது.
சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்படவுள்ளது. இது சினிமா மட்டுமல்லாமல், பொது சேவை, கலாசார தலைமைத்துவம் ஆகியவற்றுக்காகவும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இதில் கலந்துகொள்வதற்காக சிரஞ்சீவி இன்று காலை லண்டன் சென்றார். அப்போது லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு சிரஞ்சீவிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, ஒரு பெண் ரசிகர் அவரது கன்னத்தில் முத்தமிட்டார், அதைக் கண்டு சிரஞ்சீவி நெகிழ்ந்து போனார்.

அதே நேரத்தில் சுற்றியுள்ள மற்ற ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.