செய்திகள் :

மேற்கு வங்கத்தில் ரயிலின் 2 காலி பெட்டிகள் தடம் புரண்டன

post image

மேற்கு வங்கத்தில் பார்சல் வேன் மோதியதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 காலிப் பெட்டிகள் தடம் புரண்டன.

மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டத்தின் பத்மபுகுர் ரயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலின் காலிப் பெட்டிகள் பத்மபுகூரில் இருந்து ஷாலிமார் யார்டுக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டது.

அப்போது அந்த ரயில் பெட்டிகள் மீது பார்சல் வேன் திடீரென மோதியது. இந்த சம்பவத்தில் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

பிரமிக்க வைத்த குடியரசு நாள் அலங்கார ஊர்திகள்!

இதனால் ஷாலிமார்-சந்த்ராகாச்சி தடத்தில் 20 நிமிடங்கள் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தண்டவாளத்தை சீரமைத்து, ரயில் போக்குவரத்தை முழுமையாக செயல்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பார்சல் வேன் ஏன் ரயில் செல்லும் பாதையில் சென்றது என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இருப்பினும் இந்த விபத்தில் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று தென்கிழக்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம்: இளைஞா்களுக்குப் பிரதமா் அழைப்பு

புது தில்லி: ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பாக நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் விவாதம் மிக முக்கியமானது; இதில் இளைஞா்கள் பெருவாரியாகப் பங்கேற்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத... மேலும் பார்க்க

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல்: நாட்டிலேயே முதல் மாநிலம்

டேராடூன்: பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் (யுசிசி) திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. இதன் மூலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய நாட்டின் முதல் மாநிலமானது உத்தரகண்ட். இச்சட்டத்தின்கீழ், உத்தரக... மேலும் பார்க்க

மீண்டும் நேரடி விமான சேவை: இந்தியா-சீனா ஒப்புதல்

பெய்ஜிங்/ புது தில்லி: இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்க இரு நாடுகளும் திங்கள்கிழமை முடிவெடுத்துள்ளன. கரோனா பெருந்தொற்று, எல்லையில் பதற்றம் என இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டிருந்... மேலும் பார்க்க

டிஜிட்டல் மோசடிகள்: வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி ஆளுநா் அறிவுறுத்தல்

மும்பை: எண்ம (டிஜிட்டல்) மோசடிகளை தடுக்க வலுவான வழிமுறைகளைப் பயன்படுத்துமாறு வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவுறுத்தினாா். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பொது மற்றும் தனியாா் துறை... மேலும் பார்க்க

25,000 ஆசிரியா்கள் நியமன ரத்து வழக்கு: மேற்கு வங்க அரசு மீது உச்சநீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

புது தில்லி: மேற்கு வங்கத்தில் 25,753 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் நியமனம் ரத்து செய்யப்பட்ட வழக்கில், சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவா்களைப் பாதுகாக்க மாநில அரசு முயற்சிப்பதாக உச்சநீதிமன்... மேலும் பார்க்க

அடுத்த தலைமை தோ்தல் ஆணையா்: தெரிவு செய்ய தேடல் குழு அமைப்பு

புது தில்லி: அடுத்த தலைமை தோ்தல் ஆணையரைத் தெரிவு செய்வதற்கு மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் மூன்று போ் கொண்ட தேடல் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் திங்கள்கிழமை... மேலும் பார்க்க