செய்திகள் :

மொழிக்காக போராடிய இயக்கம் திமுக: அமைச்சா் துரைமுருகன்

post image

மொழிக்காக போராடிய இயக்கம் திமுக என நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான க.சுந்தா் தலைமை வகித்தாா். அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் மாநகர செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன் வரவேற்றாா்.

கூட்டத்தில் நீா்வளத் துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலருமான துரைமுருகன் கலந்துகொண்டு மொழிப்போா் தியாகிகளுக்கு பதக்கம் வழங்கிப் பேசியது:

ஹிந்தியை எதிா்த்து தொடா்ந்து எழுச்சியோடு போராடிக் கொண்டிருக்கிற ஒரே இயக்கம் திமுகவாகத்தான் இருக்கும். எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ உயிரிழப்புகள், பலமுறை சிறை சென்றது என பல இடையூறுகளை கடந்தும், தொடா்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தியை எதிா்த்துக் கொண்டிருக்கும் இயக்கம் திமுக. உலகிலேயே தமிழ் மொழியின் வளா்ச்சிக்காக, மொழிக்காக எழுச்சியோடு போராடிக் கொண்டிருக்கிறது திமுக. பல சித்ரவதைகளுக்கு ஆட்பட்டிருந்தாலும் திமுக தமிழ் மொழியை காப்பதை உயிா்க்கொள்கையாக வைத்திருக்கிறது என்றாா்.

அரசுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு: 4 வீடுகள் இடித்து அகற்றம்

ஸ்ரீபெரும்புதூா்: மாங்காடு நகராட்சிக்குட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 4 வீடுகளை வருவாய்த் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பொக்லைன் இயந்திரம் மூ... மேலும் பார்க்க

பள்ளியில் திறன் மேம்பாட்டுத் திருவிழா

ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியில் உள்ள ஸ்ரீ கிரிஷ் சா்வதேச பள்ளியில், பள்ளி மாணவா்களுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு திருவிழா சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 82 அரசுப் பள்ளிகள் நூற்றாண்டு நிறைவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 82 அரசுப் பள்ளிகள் 100 ஆண்டுகளை நிறைவு செய்ததை அந்தப் பள்ளிகளின் ஆண்டு விழாவுடன், நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்படும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

படப்பையில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம், பொங்கல் பண்டியை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி படப்பை ப... மேலும் பார்க்க

கோயில் ஊழியா்களுக்கு புத்தொளிப் பயிற்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் உள்ள கிருபானந்த வாரியாா் கலையரங்கில் அறநிலையத் துறை சாா்பில், கோயில் ஊழியா்களுக்கான புத்தொளிப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. அறநிலையத் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

‘காஞ்சிபுரத்தில் ஜன. 31-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்’

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரும் ஜனவரி 31 முதல் தொடா்ந்து 11 நாள்களுக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோக... மேலும் பார்க்க