``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
ரூபாய் மதிப்பு கடும் சரிவு!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் சரிந்து ரூ. 84.76 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் 3வது வணிக நாளான இன்று 8 காசுகள் வரை சரிந்துள்ளது.
உள்நாட்டுச் சந்தைகளின் நேர்மறையான போக்கு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிதி வரத்து குறைவு உள்ளிட்ட காரணிகள் ரூபாய் மதிப்பில் எதிரொலித்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
வாரத்தின் மூன்றாவது நாளான இன்று பங்குச் சந்தையில் பெரிதாக எந்தவித மாற்றமும் இல்லாத நிலையில், கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.
வணிக நேரத் தொடக்கத்தில் வங்கிகளுக்கு இடையிலான நாணய பரிமாற்றத்தில் இந்திய ரூபாய் மதிப்பு 84.66 காசுகளுடன் தொடங்கியது. ரூ. 84.65 முதல் ரூ. 84.76 காசுகளுக்கு இடையே இன்று பரிமாற்றம் நடைபெற்று வந்த நிலையில், வணிக நேர முடிவில் 8 காசுகள் குறைந்து 84.76 காசுகளுடன் நிறைவு பெற்றது.
உலகலாவிய கச்சா எண்ணெய் மதிப்பு 0.83 காசுகள் உயர்ந்து 74.23 டாலராக விற்கப்படுகிறது.
பங்குச் சந்தை நிலவரம்
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 110.58 புள்ளிகள் உயர்ந்து 80,956.33 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.14 சதவீதம் உயர்வாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 10.30 புள்ளிகள் உயர்ந்து 24,467.45 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.042 சதவீதம் உயர்வாகும்.
வங்கி மற்றும் ரியாலிட்டி துறை பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. இதில் ரியாலிட்டி, மீடியா துறை பங்குகள் 0.5 சதவீதமும், பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் 2 சதவீதம் வரையும் உயர்ந்திருந்தன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 3,664.67 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக பங்கு வர்த்தக தரவு நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
ஆசிய பங்குச் சந்தைகளில் டோக்கியோவைத் தவிர சியோல், ஷாங்காய், ஹாங் காங் பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிந்தன. ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இதுவரை இல்லாத வகையில் உயர்ந்தன.