ரூ.1.42 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களைப் பதுக்கியவா் கைது
ஈரோட்டில் ரூ.1.42 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களைப் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு சூளை, முதலிதோட்டம் பகுதியில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக ஈரோடு வடக்கு போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் குறிப்பிட்ட அந்த வீட்டில் சோதனையிட்டனா். அப்போது, அங்கு ரூ.1.42 லட்சம் 134 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
தொடா் விசாரணையில், புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த வீடு மளிகை பொருள்கள் விநியோகஸ்தா் மாரிமுத்து (59) என்பவருக்கு சொந்தமானது என்றும், விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, 134 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அதே பகுதியில் பதுங்கியிருந்த மாரிமுத்துவை சனிக்கிழமை கைது செய்தனா்.