செய்திகள் :

கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம், யானை தாக்கி பலியானால் ரூ.2 லட்சமா? தமிழிசை

post image

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் நிலையில், யானை தாக்கி பலியானால் ரூ.2 லட்சம்தானா? என தமிழக அரசுக்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக் கிழமை வந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட ஆத்தூர், ஏரல் பாலம் இன்னும் சரி செய்யப்படவில்லை. மழை வெள்ளம் காலத்தில் திருச்செந்தூர் செல்ல சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மகாராஷ்டிரத்தைப் பொருத்தவரை நல்லாட்சிக்கும், நல்ல வளர்ச்சிக்கும் மக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். பிரதமரின் நல்ல திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு தரும் காலம் வெகு தொலைவில் இல்லை. எனவே, வரும் 2026 தேர்தல் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும்.

மருத்துவமனையில் கத்திக்குத்து, பள்ளிக்கூடத்தில் கத்திகுத்து, வழக்காடு மன்றத்தில் கத்தி குத்து என, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் இன்னும் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கமுடியவில்லை.

தமிழகத்துக்கு அதிக நிதி

பாஜகவை பொருத்தவரை ஊழல் என்ற பேச்சுக்கு இடமில்லை.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூ.10 லட்சம் அரசு கொடுக்கிறது. ஆனால், யானை தாக்கி பலியானால், ரூ.2 லட்சம் மட்டுமே வழங்குகிறது.

இதேப் போன்று, பட்டாசு தொழிலில் உயிரிழந்தவர்களாக இருக்கட்டும், விவசாயி ஆக இருக்கட்டும் யாராக இருந்தாலும், குறைந்த நிதிதான் வழங்கப்படுகிறது.

இதுதான், யானையை ஆன்மிக எண்ணத்தோடு வழிபடுவதை விட்டுவிட்டு அதனை பயமான உருவமாக காட்டுவது.

தமிழக முதல்வர், திருக்கோவிலுக்கு சென்றால்தான் யானைக்கு என்ன பிரச்னை என்று தெரியும். திராவிடம் என்று சொல்லிக் கொண்டு, கோவில் குடமுழுக்குக்கு கூட அவர் செல்வதில்லை.

தமிழக அரசிடம் இருந்து கிடைக்கும் வரி வருவாயை விட அதிகப்படியான நிதி தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு, மாநில அரசுக்கு என்னசெய்தாலும், இவர்கள் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு மகாராஷ்டிரமும் ஹரியானாவும் பதில் கூறியுள்ளது.

நடிகர் விஜய் விவசாயிகளை அழைத்துள்ளார். இனி யாரையெல்லாம் கூப்பிடுகிறார் என்று பார்க்கலாம் என தமிழிசை குறிப்பிட்டார்.

முன்னதாக விமான நிலையம் வந்த அவருக்கு தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அடுத்... மேலும் பார்க்க

பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை!

பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

அதிமுக ஜானகி நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காணொளி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா, அதிமுக சாா்பில்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 600கன அடியாக அதிகரிப்பு.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 6,422 கன அடியிலிருந்து... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

அவதூறு விடியோக்களை நீக்க வேண்டும்: ஏ.ஆர். ரஹ்மான் நோட்டீஸ்!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் குறித்த அவதூறு விடியோக்களை நீக்க வேண்டும் என சமூக வலைதளங்கள் மற்றும் யுடியூப் சேனல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் அல்லது அதிகபட்சம் 24 மணிநேரத்துக்குள் ... மேலும் பார்க்க