`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
ரூ.2.63 கோடிக்கு ஏலம் போன டான் பிராட்மேன் தொப்பி!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் சர் டான் பிராட்மேனின் 'பேக்கி கிரீன்' தொப்பி, டிசம்பர் 3 ஆம் தேதி சிட்னியில் நடந்த ஏலத்தில் விற்கப்பட்டது.
1947-1948-ல் இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவிற்காக கடைசியாக விளையாடிய டெஸ்ட் தொடரின் போது பிராட்மேன் அணிந்திருந்த தொப்பி 3,90,000 டாலருக்கு (ரூ. 2.14 கோடி), வரியுடன் சேர்த்து 479,700 டாலராக (ரூ.2.63 கோடி) உயர்த்தப்பட்டு விலைக்கு வாங்கப்பட்டது.
இதையும் படிக்க..:நியூசி., இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம்..! டபிள்யூடிசியில் புள்ளிகள் இழப்பு!
டான் பிராட்மேன், 52 டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள் மற்றும் 13 அரைசதங்களுடன் 6996 ரன்களை எடுத்துள்ளார். இவர் அதிக இரட்டை சதங்கள் (12), அதிக முச்சதங்கள் (2) அடித்தவர் என்ற சாதனையை படைத்தவர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஆஸ்திரேலியா இங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அப்போது பிராட்மேன் முதல்தரப் போட்டிகளில் தனது 100-வது சதத்தை நிறைவு செய்தார்.
இதையும் படிக்க..:போர்க்களம் மாதிரி பும்ராவின் முதலிரண்டு ஓவரை விளையாட வேண்டும்..! ஆஸி. வீரர் கருத்து!
3 டெஸ்ட் போட்டிகளில் 6 இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பிராட்மேன், 178.75 சராசரியுடன் 715 ரன்கள் எடுத்தார். அதில் 3 சதங்களை பதிவு செய்தது, மட்டுமல்லாமல் அதில் ஒன்று இரட்டை சதமும் விளாசினார்.
அந்தத் தொடரில் இந்திய அணியின் மேலாளருக்கு டான் பிராட்மேன் தனது தொப்பியை பரிசளித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு பழங்காலப் பொருள்கள் வாங்கும் சேகரிப்பாளர் ஒருவரால் அந்தத் தொப்பி வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.