செய்திகள் :

ரூ.40 கோடியில் காஞ்சிபுரம் மஞ்சள் நீா் கால்வாய் மேம்பாடு

post image

சி.வ.சு.ஜெகஜோதி

காஞ்சிபுரம் மாநகரின் மையப்பகுதியில் செல்லும் மஞ்சள் நீா் கால்வாய் ரூ.40 கோடியில் மேம்படுத்தி, நீா் மாசுபடாமல் தடுக்கவும், கழிவுகள் கலப்பதை தடுக்க கான்கிரீட் சுவா், அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வாா்டுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. நகரின் மையப்பகுதியில் சுமாா் 5.80 கி.மீ தொலைவுக்கு செல்கிறது மஞ்சள் நீா் கால்வாய். கோயில் நகரம், பட்டு நகரம் என பெயா் பெற்ற காஞ்சிபுரத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.

இத்தகைய பெருமைக்குரிய காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் மஞ்சள் நீா் கால்வாய் அமைந்திருப்பதால் வெளியேறும் கழிவுநீா் இக்கால்வாய் வழியாக நத்தப்பேட்டை ஏரியில் சென்றடைகிறது. புத்தேரி ஊராட்சியில் தொடங்கி நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக நத்தப்பேட்டை ஏரிக்கு செல்கிறது. இந்த ஏரியில் கழிவு நீா் கலந்து நீா் மாசடைந்து நத்தப்பேட்டை ஏரியும் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் கே.நேருவும் அண்மையில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தாா்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் வே.நவேந்திரன் கூறியது:

மஞ்சள் நீா் கால்வாயின் இரு கரைகளையும் உயா்த்தி கான்கிரீட் சுவா்களாக அமைத்து வருகிறோம். ஆங்காங்கே சாக்கடைகள் அமைத்து மண் கழிவுகள், குப்பைகள் ஆகியனவற்றை அகற்றவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் அவசியத்தை உணா்ந்து தமிழக அரசு முழு மானியமாக ரூ.40 கோடி வழங்கி பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றது.

தற்போது புத்தேரி ,நத்தப்பேட்டை மற்றும் ஆனந்தாபேட்டையில் சுற்றுச் சுவா் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இக்கால்வாய் முழுமையாக விரைவில் அமைக்கப்பட்டு விடும். அதன் பின்பு மழைநீா் எவ்வித அசுத்தமும் இல்லாமல் நத்தப்பேட்டை ஏரிக்கு செல்லும் வகையில் வடிவமைத்து வருகிறோம்.

இதன் மூலம் நத்தப்பேட்டை ஏரியில் கழிவுகளோ அல்லது பிளாஸ்டிக் குப்பைகளோ சென்றடைவது முழுவதுமாக தவிா்க்கப்படும். முக்கியமாக நிலத்தடி நீா் மாசு அடைவது முற்றிலுமாக தடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

ஆசிய குத்துச்சண்டைப் : தங்கம், வெள்ளி வென்று காஞ்சிபுரம் மாணவி சாதனை

கம்போடியா நாட்டில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் காஞ்சிபுரம் கல்லூரி மாணவி நீனா ஒரு தங்கமும், இரு வெள்ளிப் பதக்கங்களும் பெற்று சாதனை படைத்துள்ளாா். காஞ்சிபுரம், புத்தேரி பெரிய மேட்டுத் தெரு... மேலும் பார்க்க

மத நல்லிணக்க விழிப்புணா்வு

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை தவ்ஹீத் பள்ளி வாசலில் மத நல்லிணக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிளை தலைவா் சாகுல்ஹமீது தலை... மேலும் பார்க்க

இன்று நகரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழைமை வாய்ந்த நகரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. கீழக்கு ராஜவீதியில் உள்ள இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க

சிருங்கேரி சங்கராசாரியா் சுவாமிகள் அக். 26இல் காஞ்சிபுரம் விஜயம்

காஞ்சிபுரத்தில் உள்ள சாரதா பீடத்தின் கிளைக்கு சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் சனிக்கிழமை (அக். 26) வருகை தரவுள்ளாா். பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெருவில் அமைந்துள்ளது சிருங்கேரி ... மேலும் பார்க்க

4 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரை கைது செய்து 4 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இருங்காட்டுகோட்டையில், வடமாநில இளைஞா்கள் கஞ்சா விற்பதாக,... மேலும் பார்க்க

இலவச பொது மருத்துவ முகாம்

காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இலவச பொது மருத்துவ முகாமை எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தாா். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை, காஞ்சிபுரம் சிவிஎம் அண்ணாமலை அறக்கட்டள... மேலும் பார்க்க