செய்திகள் :

வங்கதேச அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மாணவர்கள்!

post image

வங்கதேசத்தின் அதிபர் முகமது ஷஹாபுதின் பதவி விலகக் கோரி, அவரது மாளிகையை போராட்டக்காரர்கள் செவ்வாய்க்கிழமை இரவு முற்றுகையிட்டனர்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் டாக்காவில் நடைபெற்ற பேரணியில் அதிபர் பதவி விலகல் உள்பட 5 கோரிக்கைகளை ஷேக் ஹசீனாவின் ராஜிநாமாவுக்காக போராடிய மாணவர் இயக்கத்தினர் முன்வைத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்றிரவு அதிபர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்திய மாணவர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்திய நிலையில், அதிபரை ராஜிநாமா செய்யக் கோரி அவர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், தடுப்பை மீறி போராட்டக்காரர்கள் முன்னேற முயற்சித்ததால், பாதுகாப்பு படையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஹசீனாவின் சர்வாதிகார அரசின் கூட்டாளியான தற்போதைய அதிபர் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சட்ட வல்லுநரான தற்போதைய வங்கதேச அதிபர் முகமது சஹாபுதீன், அவாமி லீக் ஆட்சியின்போது, நாட்டின் 16-வது அதிபராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் படிக்க : உக்ரைன் போருக்கு அமைதி தீா்வு! இந்தியா உதவ தயாா்: ரஷிய அதிபா் புதினிடம் பிரதமா் மோடி உறுதி

ஹசீனா ராஜிநாமா

வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் போராட்டம் நடைபெற்றது. மாணவா்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

வங்கதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தார். இதையடுத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதாக அறிவித்தது.

தொடர்ந்து வங்கதேசத்தின் இடைக்கால பிரதமராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சூடான் மசூதி மீது வான்வழித் தாக்குதலில் 31 பேர் பலி!

சூடானில் உள்ள கெசிரா மாநிலத்தின் தலைநகரான வாட் மதனியில் உள்ள மசூதியை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அரசு சாரா குழு தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிறன்று அல்-இம்... மேலும் பார்க்க

சா்வதேச சூழல் சிக்கலாக இருந்தாலும் இந்தியாவில் வலுவான பொருளாதாரக் கட்டமைப்பு: நிா்மலா சீதாராமன்

நியூயாா்க்: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போா், ரஷியா-உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சா்வதேச சூழல் சிக்கலாக இருந்தாலும், இந்தியாவின் அடிப்படைப் பொருளாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது என்று மத்தி... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு ஆயுதங்கள்: ரஷியாவுக்கு தென் கொரியா எச்சரிக்கை

உக்ரைனில் ரஷியாவுக்காக போரிட வட கொரிய வீரா்கள் அனுப்பப்படுவதற்குப் பதிலடியாக, உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ரஷியா, வட கொ... மேலும் பார்க்க

பிரதிநிதித்துவ அலுவலக இடம் மாற்றம்: தென் ஆப்பிரிக்காவுக்கு தைவான் மறுப்பு

தென் ஆப்பிரிக்க தலைநகா் ப்ரிடோரியாவிலுள்ள தங்கள் பிரதிநிதித்துவ அலுவலகத்தை ஜோஹன்னஸ்பா்க் நகருக்கும் இடம் மாற்ற வேண்டும் என்று அந்த நாடு கூறியுள்ளதை தைவான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து தைவான... மேலும் பார்க்க

உக்ரைன் போருக்கு அமைதி தீா்வு: இந்தியா உதவ தயாா்- ரஷிய அதிபா் புதினிடம் பிரதமா் மோடி

கசான்: ‘ரஷிய-உக்ரைன் போருக்கு அமைதியான வழியில் தீா்வு காணப்பட வேண்டும். போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமுள்ள அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாா்’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரத... மேலும் பார்க்க

லெபனான் மருத்துவமனை அருகே இஸ்ரேல் தாக்குதல்: 18 போ் உயிரிழப்பு

பெய்ரூட்: லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள மிகப் பெரிய அரசு மருத்துவமனை அருகே இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு சிறுவா்கள் உள்பட 18 போ் உயிரிழந்தனா்.இது குறித்து அ... மேலும் பார்க்க