செய்திகள் :

``வளர்ப்பு சரியில்லை'' - முகேஷ் கண்ணா விமர்சனம்; சோனாக்‌ஷி சின்ஹா பதிலடி.. பரபரக்கும் பாலிவுட்!

post image

சோனாக்‌ஷி சின்ஹாவிடம் கேட்ட கேள்வி..

பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா கடந்த 2019ம் ஆண்டு கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் சஞ்சீவினி மலையை பெயர்த்து கொண்டு வந்தது யார் என்று கேட்டதற்கு சோனாக்‌ஷி சின்ஹாவிற்கு பதில் தெரியவில்லை. இது குறித்து அந்நேரம் நடிகர் முகேஷ் கண்ணா கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

அந்த பிரச்னை அத்தோடு முடிந்தது என்று நினைத்திருந்தபோது சமீபத்தில் முகேஷ் கண்ணா கொடுத்திருந்த நேர்காணலில், சோனாக்‌ஷி சின்ஹாவிற்கு கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்காதது குறித்து கேட்டதற்கு, சோனாக்‌ஷி சின்ஹாவின் தந்தை சத்ருஹன் சின்ஹா சரியாக ராமாயணத்தை சோனாக்‌ஷிக்கு கற்றுக்கொடுக்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு சோனாக்‌ஷி சின்ஹா காட்டமாக பதிலளித்து இருந்தார்.

அவசியம் என்ன? - சோனாக்‌ஷி சின்ஹா காட்டம்

அந்த பதிலில், "முகேஷ் கண்ணாஜி, நிகழ்ச்சி ஒன்றில் ராமாணம் தொடர்பான கேள்விக்கு நான் சரியாக பதிலளிக்காததற்கு எனது தந்தையின் தவறுதான் காரணம் என்று கூறி அறிக்கை கொடுத்திருந்ததை பார்த்தேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி பற்றி இப்போது பேசவேண்டிய அவசியம் என்ன? அதோடு அந்த நிகழ்ச்சியில் என்னுடன் வேறு ஒரு பெண்ணும் கலந்து கொண்டிருந்தார். அந்த பெண்ணை விட்டுவிட்டு எனது பெயரை மட்டும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறீர்கள்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

`யாரும் சான்று கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை' -சத்ருகன் சின்ஹா

நடிகர் சத்ருகன் சின்ஹாவும் முகேஷ் கண்ணாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், "ஒருவர் ராமாயணம் தொடர்பாக ஒரு கேள்விக்கு பதிலளிக்கவில்லை என்பதற்காக அவர் மோசமான இந்து கிடையாது. சோனாக்‌ஷி சொந்தமாக நட்சத்திரமாக உயர்ந்தவர். அவரை நான் பாலிவுட்டில் அறிமுகப்படுத்தவில்லை. அவரை மகளாக பெற்ற எந்த தந்தையும் பெருமைப்படுவார். சோனாக்‌ஷிக்கு யாரும் சான்று கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

முகேஷ் கண்ணா

முகேஷ் கண்ணா சொன்ன விளக்கம்

சோனாக்‌ஷி சின்ஹாவின் கருத்துக்கு முகேஷ் கண்ணா மீண்டும் பதில் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக முகேஷ் கண்ணா கொடுத்துள்ள பதிலில்,''எனது கருத்துக்கு சோனாக்‌ஷி சின்ஹா மிகவும் தாமதமாக பதிலளித்து இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்கு பிறகு நான் அவரை விரோதத்துடன் பார்க்கிறேன் என்று எனக்கு தெரியும். ஆனால் அவரையோ அல்லது அவரது தந்தையையோ களங்கப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் அக்கருத்தை தெரிவிக்கவில்லை. எனக்கு சத்ருகன் சின்ஹாவுடன் சுமூக உறவு இருக்கிறது. கூகுள் மற்றும் மொபைல் போன்களுக்கு அடிமையாக இருக்கும் இன்றைய தலைமுறைக்கு பதிலளிக்கவேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. அவர்களின் அறிவு விக்கிப்பீடியா மற்றும் யூடியூப் சமூக தொடர்புகளில் மட்டுமே உள்ளது''என்று குறிப்பிட்டுள்ளார். மூவரின் சண்டையால் பாலிவுட் அவர்களை வினோதத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.

கமல்ஹாசன் படப் பாடலின் உரிமையை வாங்கிய வனிதா விஜயகுமார்!

ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடிக்கும் மிஸ்டர் அண்ட் மிசஸ் படத்துக்காக கமல்ஹாசன், குஷ்பு, ஊர்வசி ஆகியோர் நடித்து தொண்ணூறுகளில் வெளியாகி ஹிட் ஆன ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் உ... மேலும் பார்க்க

கோலிவுட் கனவுக்கு முதல் படியாக சென்னையில் குடியேறுகிறாரா ராஷ்மிகா மந்தனா...?

புஷ்பா, டியர் காம்ரேட், கீதகோவிந்தம், வாரிசு போன்ற பல அதிரடித் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனம்ஈர்த்து நேஷனல் க்ரஷ் என அனைவராலும் அழைக்கப்படுகிறார் ராஷ்மிகா மந்தனா. இந்தியாவில் எங்கு போனாலும் ரசி... மேலும் பார்க்க