செய்திகள் :

விக்னேஷ் சிவன் செய்தது மட்டும் நியாயமா? - இயக்குநர் எஸ்.எஸ். குமரன்

post image

தலைப்பு விவகாரத்தில் விக்னேஷ் சிவன் செய்தது மட்டும் நியாயமா? என இயக்குநர் எஸ் எஸ் குமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மூன்று வினாடிக் காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் உங்கள் மீது வழக்கு தொடர்ந்ததாய் வெகுண்டு எழுந்த நீங்கள் கடந்த ஆண்டு எல்ஐசி என்ற என் தலைப்பை உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்.

எல்ஐசி என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்தவிதத்தில் நியாயம்.

என் கதைக்கும் அந்த தலைப்பிற்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால் எல்ஐசி என்ற தலைப்பை வழங்க முடியாத சூழல் இருக்கிறது என்று நேர்மையான முறையில் பதில் அளித்தும் அதிகாரத்தன்மையுடன் அதே தலைப்பை தன் படத்திற்கு விக்னேஷ் சிவன் வைக்கிறார் என்றால் ’உன்னால் என்ன பண்ண முடியும்?’ என்ற அதிகார நிலை தானே காரணமாய் இருக்க முடியும். அதற்கு எந்த கடவுள் மன்றத்தில் விக்னேஷ் சிவனை பதில் சொல்ல சொல்வீர்கள்?

தனுஷ் அனுமதி தரமறுத்த ரூ.10 கோடி மதிப்பிலான விடியோவை ஸ்டோரியில் பகிந்த விக்னேஷ் சிவன்!

உங்களை விடவும் பலம் பொருந்தியவர்கள் என்றால் இரண்டு வருடம் பொறுமையோடு பயன்படுத்த அனுமதி கேட்கும் நீங்கள் எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எதேச்சிகாரத்துடன் நடந்து கொண்டு என்னை மன உளைச்சல் ஆக்கியதற்காக நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்.

இப்பொழுது வரை அந்தத் தலைப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் என்னை பாதித்துக் கொண்டிருக்கிறது. என் படத்தையும் அது பாதிப்படைய செய்திருக்கிறது.

எந்தப் படைப்பாளியும் தன் படைப்பைப் பல காரணங்களோடும் பல பொருட்செலவோடும் தான் கட்டமைக்கிறார்கள். நீங்கள் உங்கள் வியாபார நோக்கத்திற்காக அதை பயன்படுத்தும் பட்சத்தில் முறையான அனுமதியோடும் முறையான மதிப்பூதியத்துடனும் பயன்படுத்த வேண்டும் என்ற அறத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

நீங்கள் இங்கு எதையும் இலவசமாக செய்யவில்லை. எங்கள் படைப்புகளை மட்டும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது மூலம் படைப்புலகத்திற்கு மிக மோசமான வழிகாட்டியாக நீங்களும் உங்கள் கணவரும் இனம் காட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க’. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நயன்தாரா திருமணப்படத்தின் ஓடிடி விற்பனை தொகை இவ்வளவா?

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தின் ஓடிடி விற்பனை தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் கடந்த 20... மேலும் பார்க்க

ரூ. 100 கோடியை நெருங்கும் கங்குவா வசூல்!

கங்குவா திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.கங்குவா திரைப்படம் கடந்த வியாழக்கிழமை அன்று உலகளவில் பிரம்மாண்டமாக வெளியானது. 10000க்கும் அதிகமான திரைகளில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படு... மேலும் பார்க்க

ஒன்ஸ் மோர் முதல் பாடல்!

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிகை அதிதி ஷங்கர் இணைந்து நடித்த ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள ஒன்ஸ் மோர் திரைப்படம் இன்றைய கால இளைஞர்களி... மேலும் பார்க்க

இளையராஜா குரலில் தினம் தினமும் பாடல்!

விடுதலை - 2 படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் இளையராஜா பாடியுள்ளார்.இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை - 2 திரைப்படம் டிச. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்திற்குக... மேலும் பார்க்க

தேசிய ஆடவர் ஹாக்கி - ஒடிஸா அணி சாம்பியன்

சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஒடிஸா அணி சாம்பியன் பட்டம் வென்றது. 14-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில்... மேலும் பார்க்க

குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை வீழ்த்திய இளைஞர்!

உலக குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனுக்கும், யூடியூபரும் இளம் தலைமுறை குத்துச்சண்டை வீரருமான ஜேக் பாலுக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மைக் டசன் தோல்வியடைந்துள்ளார். 58 வயதான உலக ஹெவிவெ... மேலும் பார்க்க