செய்திகள் :

வீட்டில் திருட முயன்றவரை பொதுமக்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

post image

அரக்கோணம் அருகே வீட்டில் திருட முயன்ற நபரை பொதுமக்கள் தாக்கியதில் அந்த இளைஞர் உயிரிழந்தார்.

அரக்கோணம் அடுத்த பரமேஸ்வர மங்கலத்தை அடுத்த தென்றல் நகரில் சனிக்கிழமை (அக். 19) விடியற்காலையில் ஒரு நபர் ஒரு வீட்டில் திருட முயன்றபோது, அவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்துள்ளனர்.

அந்த நபர் பலத்த காயம் அடைந்துள்ளார். தக்கோலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த நபரை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே அந்த நபர் இறந்து விட்டது தெரிய வந்தது.

இதையும் படிக்க:சிறைக் கைதிகளுடன் சதித் திட்டம் தீட்டும் வழக்குரைஞா்கள் மீது சட்ட நடவடிக்கை: டிஜிபி சங்கா் ஜிவால்

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தக்கோலம் காவல் நிலைய போலீசார், அந்த நபர் அரக்கோணத்தை அடுத்த அரிகலபாடியைச் சேர்ந்த மூர்த்தியின் மகன் மாதேஷ் என்கிற திருமாதேஸ்வரன் (24) என்பது தெரியவந்த வந்தநிலையில் அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தக்கோலம் போலீசார் மூன்று பேரைப் பிடித்து வைத்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக கனமழை முதல் ஓரிரு இடங... மேலும் பார்க்க

காசு கொடுத்தால்தான் விபூதி; தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடப்பது நல்லதல்ல: உயர் நீதிமன்றம்

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ... மேலும் பார்க்க

'ஆளுநர் கற்பனை உலகத்தில் இருக்கிறார்' - ப. சிதம்பரம்

தமிழ்நாட்டில் இந்தி கற்க மாணவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை, ஆளுநர் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். ... மேலும் பார்க்க

3500 அரசு மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்டர்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் நாள்தோறும் ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலாக மது வணிகம் நடைபெறும் 3500-க்கும் கூடுதலான டாஸ்மாக் மதுக்கடைகளில் இரண்டாவது விற்பனைக் கவுன்டரை திறக்க முடிவு செய்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் வெள... மேலும் பார்க்க

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி 3வது முறையாக முழு கொள்ளளவை எட்டியதையடுத்து தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்... மேலும் பார்க்க

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: தமிழக அரசு

தமிழகத்தில் அக்.31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுவத... மேலும் பார்க்க