Vikatan Tele Awards 2024: "விஜய் சார்ட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன்" - திவ்யதர்ஷ...
`வெற்றிகரமாக முடிந்தது' - பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி தந்த ஆப்கானிஸ்தான்; காரணம் என்ன?
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் தாக்குதல் வெடித்துள்ளது.
வியாழக்கிழமை நடந்த தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 9), ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலிலும், அதன் தென்கிழக்கு பகுதியிலும் இரண்டு குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன.
இது பாகிஸ்தானுடைய தாக்குதல் என்று அடுத்த நாளே இந்தத் தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது. மேலும், இது ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறுவது ஆகும் என்றும் கூறியிருந்தது.
பதிலடி தாக்குதல்
இதையடுத்து நேற்று இரவு பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளனர் ஆப்கானிஸ்தானின் தாலிபன் ஆட்சியாளர்கள்.

அறிக்கை
இந்தப் பதிலடி தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் மீண்டும் ஆப்கானிஸ்தான் இறையாண்மையை மீறுவது போல செயல்பட்டது. ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதலையும் நடத்தியது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் ஆயுதப் படைகள் இரவு டுராண்ட் கோட்டில் உள்ள பாகிஸ்தான் படை மையங்களின் மீது வெற்றிகரமாக பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டன.
இந்த ஆபரேஷன் நள்ளிரவில் முடிந்தது.
பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறினால், எங்களுடைய படைகள் எல்லைகளைப் பாதுகாக்க தயாராக இருக்கும் மற்றும் சரியான பதிலடியைத் தரும்" என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த வியாழக்கிழமை, ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் இதுவரை எதுவும் கூறவில்லை.
Clarification
— د ملي دفاع وزارت - وزارت دفاع ملی (@MoDAfghanistan2) October 11, 2025
The Armed Forces of the Islamic Emirate of Afghanistan, tonight conducted a successful retaliatory operation against the centers of Pakistani forces along the Durand Line in response to the repeated violations of Afghanistan's sovereignty by the Pakistani military pic.twitter.com/3mJ2rdxbvb