செய்திகள் :

``100 மாவட்டங்களில் நக்சல்கள் அழிக்கப்பட்டுள்ளனர்'' - பிரதமர் மோடியின் தீபாவளி உரை!

post image

கோவாவில் உள்ள கடற்படைத் தளத்தில் ராணுவ வீரர்கள்களுடன் தீபாவளி கொண்டாடினார் பிரதமர் மோடி.

ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற இந்தியாவில் உருவாக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மோடி, இந்தியாவில் நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் இயக்கங்களை முழுவதுமாக ஒழிக்கும் நேரத்தில் இருப்பதாகப் பேசியுள்ளார்.

தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

மேலும் ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றி குறித்தும், அதில் பயன்படுத்தப்பட்ட பிரமோஸ், ஆகாஷ் போன்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகனைகள் பற்றியும் பேசினார்.

இந்த ஏவுகனைகள் சிலருக்கு பயத்தை ஏற்படுத்துவதாகவும், பல நாடுகள் இவற்றை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டுவதாகவும் மோடி கூறியுள்ளார்.

பிரதமரின் பேச்சு

"பாதுகாப்பு படைகளின் துணிச்சலாலும் வீரத்தால் நம் நாடு கடந்த சில ஆண்டுகளில் மற்றொரு இலக்கை எட்டியிருக்கிறது. இது மாவோயிசத்தைப் பற்றியது. மாவோயிசத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான விளிம்பில் நம் நாடு இருக்கிறது.

2014ம் ஆண்டு இந்தியாவில் 125 மாவட்டங்கள் மாவோயிசத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. இப்போது வெறும் 11 ஆகக் குறைந்திருக்கிறது. இதிலும் 3 மாவட்டங்களில் மட்டுமே அவர்களின் தாக்கம் இருக்கிறது.

பாதுகாப்பு படையினர்
பாதுகாப்பு படையினர்

100க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் நக்சல் பாதிப்பிலிருந்து விடுதலைப் பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றன. மக்கள் கண்ணியத்துடன் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்." என்றார்.

மேலும் மாவோயிஸ்டுகளால் பள்ளிக் கூடங்கள், மருத்துவமைகள் கட்டுவது தடுக்கப்பட்ட, சாலைகள் போடுவது, தொழில்கள் தொடங்கப்படுவது தடுக்கப்பட்ட இடங்கள் தற்போது வளர்ச்சி பெறுவதாகவும் மோடி பேசியுள்ளார்.

"நக்சல்களால் பாதிக்கப்பட்டிருந்த அதே பிராந்தியங்களில், நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன, புதிய வணிகங்கள் வேரூன்றியுள்ளன, பள்ளிகளும் மருத்துவமனைகளும் குழந்தைகளுக்கான புதிய எதிர்காலத்தை உருவாக்குகின்றன" என்று மோடி கூறினார்.

இவையெல்லாம் பாதுகாப்பு படையினரின் துணிச்சல், உறுதி மற்றும் தியாகத்தினாலே சாத்தியமானது என்றும் அவர் பேசியுள்ளார்.

``ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்தால் கூடுதல் வரி விதிப்போம்" - மீண்டும் முருங்க மரம் ஏறும் ட்ரம்ப்

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தும் முயற்சியில் அதிபர் ட்ரம்ப் ரஷ்யா மீது சிலப் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தார். அதைத் தொடர்ந்து, ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய் வியாபார லாபம்தான் உக்ரைன் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: விற்பனைக்கு வந்த பலவகை பூக்கள்; நிலக்கோட்டையில் குவியும் மக்கள்!

நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில்நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில்நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில்நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில்நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில்நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில்நி... மேலும் பார்க்க

Vijay-அ க்ளோஸாக வாட்ச் பண்ணும் Amit shah, Stalin-க்கு 10 சோதனைகள்? | Elangovan Explains

தைலாபுரம் ரூட் எடுக்கும் திமுக. பனையூருக்கு ரூட் போடும் பாஜக. பாமகவை சுற்றி பட்டாசு. ராமதாசை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு. அன்புமணியிடம் பாஜக போட்ட டீல். இன்னொரு பக்கம், விஜயை க்ளோசாக வாட்ச் பண்ணும் ... மேலும் பார்க்க

Trump: 'No Kings' ட்ரம்பிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்; பின்னணி என்ன?

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான கொள்கைகளை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்கள் மற்றும் லண்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரு... மேலும் பார்க்க

நீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு; சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றுக்கு சீமான... மேலும் பார்க்க