செய்திகள் :

``15 வருஷமா துணையோடு சேரவில்லை, எப்படி முட்டையிட்டது 62 வயது மலைப்பாம்பு?'' - வியக்கும் விஞ்ஞானிகள்

post image

அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் உயிரியல் பூங்காவில் இருக்கும் 62 வயது பெண் மலைப்பாம்பு ஒன்று, ஆண் பாம்புடன் தொடர்பு இல்லாமல் முட்டைகளை இட்டு விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த அசாதாரண நிகழ்வு, அறிவியல் உலகில் கவனம் பெற்று வருகிறது.

இந்த நிகழ்வு 'பார்த்தினோஜெனிசிஸ்' எனப்படும் கன்னிப்பெருக்கம் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

கருவுறுதல் இன்றி முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் இந்த அரிய வகை இனப்பெருக்க முறை குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பந்து மலைப்பாம்புகள் (Ball Pythons) பொதுவாக 20 முதல் 30 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர்வாழும். ஆனால், செயின்ட் லூயிஸ் உயிரியல் பூங்காவில் இருந்த இந்த பாம்பு, 62 வயதை எட்டியுள்ளது.

இதுவே ஒரு சாதனையாகப் பார்க்கப்படும் நிலையில், இது முட்டையிட்டது விஞ்ஞானிகளை மேலும் ஆச்சரியப்படுத்தியது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண் பாம்பின் சேர்க்கை இல்லாமல் இருந்த அந்த பெண் பாம்பு முட்டையிட்டுள்ளது. இப்படி இருக்கும் சூழலில் எப்படி முட்டையிட்டது என்பது கேள்வியை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து பேசிய உயிரியல் பூங்காவின் ஊர்வனவியல் மேலாளர் மார்க் வானர், "வரலாற்றிலேயே இவ்வளவு வயதான பாம்பு முட்டையிட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கோவை ஆபரேஷன் ரோலக்ஸ்: மிரண்டு தாக்கிய காட்டு யானை.. மருத்துவர் காயம்!

கோவை தொண்டாமுத்தூர், நரசீபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. அதில் வலம் வரும் ஒற்றை ஆண் காட்டு யானைக்கு அந்தப் பகுதி மக்கள் ‘ரோலக்ஸ்’ என்று பெயரிட்டுள்ளனர். ரோலக்ஸ... மேலும் பார்க்க