மருத்துவமனைகளில் ஓஆா்எஸ் விநியோகம்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
2-வது டி20: ஜிம்பாப்வேவுக்கு 138 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது.
அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: எனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்கிறேன்: ஹார்திக் பாண்டியா
அயர்லாந்து - 137/8
முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக லோர்கான் டக்கர் 40 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஹாரி டெக்டார் 28 ரன்களும், கர்டிஸ் கேம்ஃபர் 26 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் டிரெவர் குவாண்டு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரிச்சர்டு நிகராவா மற்றும் சிக்கந்தர் ராஸா தலா இரண்டு விக்கெட்டுகளையும், பிளெஸிங் முஸர்பானி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: இந்தியாவை எப்படியாவது வென்றுவிடுங்கள்: பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்பே அணி களமிறங்குகிறது.