செய்திகள் :

2021-யைவிட 2026 தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியைச் சந்திக்கும்: டிடிவி தினகரன்

post image

2021 தேர்தலைவிட 2026 தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியைச் சந்திக்கும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

அதிமுக ஆட்சியில் அமர்வதைவிட கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே எடப்பாடி பழனிசாமியின் ஒரே இலக்கு. ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை. கட்சி தன் கையில் இருந்தால் போதும் என நினைக்கிறார். 2021 தேர்தலைவிட 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியைச் சந்திக்கும்.

அரசியலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைவிட விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என கருதுகிறேன்.

விஜய் அரசியலுக்கு வந்த பிறகு சீமானின் பேச்சு சரியாக இல்லை. அண்ணா, எம்ஜிஆர் குறித்த சீமானின் அருவறுக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. மறைந்த தலைவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான பேச்சை இனியும் தொடர்ந்தால் அதற்கான எதிர்வினைகள் மிகக்கடுமையாக இருக்கும்" என்று பேசியுள்ளார்.

AMMK party leader TTV Dhinakaran says that AIADMK will face a crushing defeat in 2026

இதையும் படிக்க | போர் முடிந்த பிறகு பதவி விலகுவேன்; மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன்: ஸெலென்ஸ்கி

'பொறுத்திருக்க வேண்டும், நல்லதே நடக்கும்' - செங்கோட்டையன்

அதிமுக ஒருங்கிணைப்பு விரைவில் நடக்கும், பொறுத்திருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும்... மேலும் பார்க்க

செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி, அமெரிக்காவுக்கு ஒற்றையடிப் பாதை... விஜய் கலகலப்பு!

நாமக்கலில் தவெக பிரசாரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், இந்த நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சுகிற வரிகளை எழுதிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, நாமக்கல்லை சேர்ந்தவர். அதேபோல, தமிழ்நாட்டு... மேலும் பார்க்க

இந்த 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

நீலகிரி, கோவை உள்பட 4 மாவட்டங்களில் இன்று (செப்.27) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:நேற்று (26-... மேலும் பார்க்க

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள்! - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

கடந்த ஜூலை மாதம் நடந்த குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிராம நிா்வாக அலுவலா்கள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா் மற்றும் சுருக்கெ... மேலும் பார்க்க

உணவுப் பாதுகாப்பு காவலர் எம்.எஸ். சுவாமிநாதன்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பல கோடி பேரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எம்.எஸ். சுவாமிநாதன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னையில் இன்று காலை நடைபெற்ற பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்ட... மேலும் பார்க்க

தவெக தலைவர் விஜய் பிரசாரம் டிசம்பர் வரையல்ல! அட்டவணையில் திடீர் மாற்றம்!!

தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டம் டிசம்பர் மாதம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க