செய்திகள் :

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள்! - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

post image

கடந்த ஜூலை மாதம் நடந்த குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கிராம நிா்வாக அலுவலா்கள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா்கள், உதவியாளா்கள், வனக் காவலா், வனக் காப்பாளா்கள் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்தஜூலை 12 ஆம் தேதி நடைபெற்றது. 13 லட்சம் பேர் வரையில் விண்ணப்பித்திருந்த நிலையில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 போ் தோ்வு எழுதினர்.

தேர்வு முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்திருந்தார். அதன்படி விரைவில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.

இந்நிலையில், குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குரூப் 4 தேர்வின் மூலமாக 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த நிலையில் 727 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பணியிடங்களின் எண்ணிக்கை 4,662 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

TNPSC announced that 727 additional vacancies added in Group 4 exam

இதையும் படிக்க | எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

2021-யைவிட 2026 தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியைச் சந்திக்கும்: டிடிவி தினகரன்

2021 தேர்தலைவிட 2026 தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியைச் சந்திக்கும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் அமர்வதைவிட கட்சியை த... மேலும் பார்க்க

உணவுப் பாதுகாப்பு காவலர் எம்.எஸ். சுவாமிநாதன்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பல கோடி பேரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எம்.எஸ். சுவாமிநாதன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னையில் இன்று காலை நடைபெற்ற பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்ட... மேலும் பார்க்க

தவெக தலைவர் விஜய் பிரசாரம் டிசம்பர் வரையல்ல! அட்டவணையில் திடீர் மாற்றம்!!

தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டம் டிசம்பர் மாதம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

நாமக்கல், கரூரில் பிரசாரம்: திருச்சி வந்தார் தவெக தலைவர் விஜய்!

தவெக தலைவா் விஜய், நாமக்கல் மற்றும் கரூரில் இன்று மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கும் நிலையில், தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.திருச்சி விமான நிலையத்திலிருந்து, சிறப... மேலும் பார்க்க

சென்னை தெருக்களுக்கு நடிகா் ஜெய்சங்கா், எஸ்.வி.சேகா் தந்தை பெயா்ப் பலகைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னையில் தெருக்களுக்கு நடிகா் ஜெய்சங்கா், நடிகா் எஸ்.வி.சேகா் தந்தை ஆகியோரது பெயா்கள் சூட்டப்பட்ட பெயா்ப் பலகைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து க... மேலும் பார்க்க

இளையராஜா வழக்கு: சோனி நிறுவனத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

இசையமைப்பாளா் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தி வணிக ரீதியாக ஈட்டிய வருவாய் விவரங்களைத் தாக்கல் செய்ய சோனி நிறுவனத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சோனி மியூசிக் எண்டா்டெய்ன்மென்ட், எக்கோ ரெக்... மேலும் பார்க்க