தாயின் கண்முன்னே 5 மகனின் தலை துண்டித்துக் கொலை! மனநலம் பாதித்தவர் வெறிச்செயல்!
அஸெஞ்ஜர் நிறுவனத்திலிருந்து 11,000+ ஊழியர்கள் நீக்கம்! சிஇஓவின் எச்சரிக்கை தகவல்
சர்வதேச முன்னணி பெரு நிறுவனங்களில் ஒன்றான அஸெஞ்ஜர், உலகம் முழுவதும் உள்ள தன்னுடைய நிறுவனங்களில் பணியாற்றி வந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கடந்த மூன்று மாதங்களில் பணிநீக்கம் செய்திருக்கிறது.
செய்யறிவு துறையின் அதிகவேக வளர்ச்சி, பெருநிறுவன தேவைகள் குறைவு போன்றவை இந்த பணி நீக்கத்துக்குக் காரணமாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
865 மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், இந்த பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது, அடுத்தடுத்த மாதங்களிலும் பணி நீக்க நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ளது.