தாயின் கண்முன்னே 5 மகனின் தலை துண்டித்துக் கொலை! மனநலம் பாதித்தவர் வெறிச்செயல்!
மத்திய பிரதேசத்தில் தாயின் கண்முன்னே அவரது மகனின் தலையைத் துண்டித்த மனநலம் பாதித்தவரின் வெறிச்செயல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேசத்தின் தார் பகுதியில் காலு சிங் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த மகேஷ் என்பவர், காலு சிங்கின் 5 வயது மகன் விகாஸை திடீரென ஈட்டிபோன்ற ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
வெள்ளிக்கிழமையில் நடந்த இந்தச் சம்பவத்தில், சிறுவனின் தலையை தாயின் கண்முன்னேயே துண்டித்துவிட்டு, உடலை மட்டும் தனது தோளில் தூக்கிப்போட்டு சென்றுள்ளார், மகேஷ்.
மகேஷின் இந்த வெறிச்செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாயார், கத்திக் கூச்சலிட்டதால் அப்பகுதியினர் ஒன்றுகூடினர்.
மகேஷின் வெறிச்செயலைக் கண்ட அப்பகுதி மக்கள், மகேஷை அடித்து உதைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததுடன், காயமடைந்த மகேஷை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.
மகேஷ் குறித்து விசாரணை நடத்தியதில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், கடந்த 4 நாள்களாக அவர் வீட்டுக்குச் செல்லவில்லை என்றும் மகேஷின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, இந்தச் சம்பவத்துக்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாகத்தான் அருகிலிருந்த ஒரு கடையில் மகேஷ் திருட முயன்றதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
மகேஷை தெரியாது என்றும், இதுவரையில் அவரை பார்த்தது கிடையாது என்றும் விகாஸின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இதையும் படிக்க:போர் முடிந்த பிறகு பதவி விலகுவேன்; மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன்: ஸெலென்ஸ்கி