செய்திகள் :

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடக்கிவைத்தார் பிரதமர்!

post image

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று(சனிக்கிழமை) தொடக்கிவைத்தார்.

இந்திய பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளா்களுக்கு 4ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் 100% சதவீத 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு 29,000-30,000 கிராமங்களில் புதிதாக 97,500 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒடிசாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, சுதேசி 4ஜி சேவையையும் இன்று காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார்.

இதன்மூலம் உள்நாட்டிலேயே தொலைத்தொடா்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடும் டென்மாா்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் 5-ஆவது நாடாக இந்தியாவும் இணைகிறது.

ஜெய்ப்பூர் வர்த்தக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒடிசா ஜார்சுகுடா நிகழ்ச்சியில் இதுகுறித்துப் பேசிய பிரதமர் மோடி,

"உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு 4ஜி சேவைகளைத் தொடங்கிய உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது. பிஎஸ்என்எல் மூலமாக இந்தியா உலகளாவிய தொலைதொடர்பு உற்பத்தி மையமாக மாறுகிறது.

சுதேசி 4ஜி இணைய சேவை இன்று இங்கிருந்து தொடக்கிவைக்கிறேன். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1 லட்சம் 4ஜி மொபைல் கோபுரங்கள் இன்று பயன்பாட்டுக்கு வருகின்றன.

அதிவேக இணையம் பெறாத பகுதிகள், கிராமங்கள் இதன் மூலமாக பயன்பெறும். எல்லையில் உள்ள நமது வீரர்களும் பாதுகாப்பான அதிவேகமான உள்நாட்டு சேவைகளை இனி பயன்படுத்த முடியும்" என்று கூறினார்.

PM Modi inaugurated the indigenous BSNL 4G network via video conferencing in jaipur

இதையும் படிக்க | போர் முடிந்த பிறகு பதவி விலகுவேன்; மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன்: ஸெலென்ஸ்கி

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்டுகளின் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளின் உற்பத்திக்கூடம் பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டுள்ளது. சுக்மா மாவட்டத்தில், கொய்மெண்டா கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியி... மேலும் பார்க்க

தாயின் கண்முன்னே 5 மகனின் தலை துண்டித்துக் கொலை! மனநலம் பாதித்தவர் வெறிச்செயல்!

மத்திய பிரதேசத்தில் தாயின் கண்முன்னே அவரது மகனின் தலையைத் துண்டித்த மனநலம் பாதித்தவரின் வெறிச்செயல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.மத்திய பிரதேசத்தின் தார் பகுதியில் காலு சிங் என்பவரின் வீட்டுக்க... மேலும் பார்க்க

மும்பை -அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் முழுமையாக திறக்கப்படும்: அஸ்வினி வைஷ்ணவ்

2029-க்குள் மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தின் முழுப் பகுதியும் செயல்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அஸ்வினி... மேலும் பார்க்க

மன அழுத்தத்தில் தள்ளிய கனவு நகரம் பெங்களூரு! வேறு நகரங்களுக்கு படையெடுக்கும் பெங்களூர்வாசிகள்!

போக்குவரத்து நெரிசலில் உலகிலேயே மூன்றாவது மோசமான நகரமாக பெங்களூரு மதிப்பிடப்பட்டுள்ளது.நாட்டின் தொழில்நுட்பத் துறையின் இதயத் துடிப்பாக, நீண்ட காலமாக இருந்து வரும் பெங்களூரு, ஒரு காலத்தில் பல குடியிருப... மேலும் பார்க்க

மாதா அமிர்தானந்தமயிக்கு கேரள அரசு கௌரவம்!

ஐ.நா. அவையில் மாதா அமிர்தானந்தமயி உரையாற்றியதன் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கேரள அரசு அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபைக் கூட்டத்தில், கேர... மேலும் பார்க்க

ஒடிசாவில் ரூ.60,000 கோடியில் மேம்பாட்டுத் திட்டம்: பிரதமர் தொடங்கி வைத்தார்!

ஓடிசாவின் ஜர்சுகுடாவில் ரூ. 60,000 கோடிக்கும் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜர்சுகுடாவில் தொலைத்தொடர்பு, ரயில்வே மற்றும் உ... மேலும் பார்க்க