செய்திகள் :

மன அழுத்தத்தில் தள்ளிய கனவு நகரம் பெங்களூரு! வேறு நகரங்களுக்கு படையெடுக்கும் பெங்களூர்வாசிகள்!

post image

போக்குவரத்து நெரிசலில் உலகிலேயே மூன்றாவது மோசமான நகரமாக பெங்களூரு மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் தொழில்நுட்பத் துறையின் இதயத் துடிப்பாக, நீண்ட காலமாக இருந்து வரும் பெங்களூரு, ஒரு காலத்தில் பல குடியிருப்பாளர்களின் கனவு இலக்காக இருந்தது. ஆனால், தற்போது போக்குவரத்து நெரிசல், நீர்த் தட்டுப்பாடு, சொத்துகள் உள்ளிட்ட காரணங்களால் பெங்களூரு வாழ்க்கை மோசமாகியுள்ளது.

பெங்களூரின் இந்த நிலைமையைக் குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். பெங்களூரு மக்கள், ஒரு வருடத்தில் சராசரியாக 134 மணிநேர அளவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வதாகக் கூறப்படுகிறது.

பெங்களூரில் போக்குவரத்து மட்டும் இல்லை; அதிகரிக்கும் காற்று மாசு, அதிக விலையிலான வீடுகள், நீர்ப் பற்றாக்குறை ஆகியவையும் மக்களின் வாழ்க்கையை கடிதாக்குகின்றன. இதன் காரணமாக சிறிய, உள்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கைத்தரத்தில் சிறந்து செயல்படும் நகரங்களுக்கு மக்கள் தேடுகின்றனர்.

இந்த வசதிகளெல்லாம், மைசூரில் இருக்கிறது. மைசூரில் நீங்கள் 15 நிமிடங்களுக்குள் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். வாழ்க்கைச் செலவும் பெங்களூரைவிட 10 முதல் 20 சதவிகிதம்வரையில் குறைவாக இருக்கும்.

Traffic Index Ranking

மைசூரில், கடந்தாண்டில் மனைகளின் மதிப்பு 50 சதவிகிதம் உயர்ந்திருந்தாலும், அது பெங்களூரைவிட 30 முதல் 50 சதவிகிதம் குறைவே. குவெம்பு நகர், விஜயா நகர் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ. 60 லட்சத்துக்கும், சரஸ்வதிபுரம், ஜெயலட்சுமிபுரம் போன்ற உயர்தர குடியிருப்புப் பகுதிகளில் ஒரு கோடி ரூபாயிலேயே தொடங்குகின்றன.

அதுமட்டுமின்றி, 2023-ல் பெங்களூரு - மைசூரு இடையிலான விரைவுச் சாலை நிறைவடைந்ததால், மைசூரை மேலும் வலுப்படுத்தியது.

கடந்த 10 ஆண்டுகளில் பெருநகரங்களில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி காணப்பட்டால், அடுத்த 10 ஆண்டுகளில் அதே வளர்ச்சி அடுக்கு 2 நகரங்களில் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவின் பெருநகரங்கள், தொடர்ந்து உள்கட்டமைப்பு நெருக்கடியை எதிர்கொண்டு வரும்நிலையில், அடுக்கு 2 நகரங்களில் வளர்ச்சியடைகின்றன.

இதையும் படிக்க:முன்னாள் முதல்வர் சைக்கோ! அழைப்பிதழால் ஆளுங்கட்சி எம்எல்ஏ அதிருப்தி!

Bengaluru ranked the third worst city in the world; People are leaving the Indian Silicon Valley

மும்பை -அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் முழுமையாக திறக்கப்படும்: அஸ்வினி வைஷ்ணவ்

2029-க்குள் மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தின் முழுப் பகுதியும் செயல்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அஸ்வினி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடக்கிவைத்தார் பிரதமர்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று(சனிக்கிழமை) தொடக்கிவைத்தார். இந்திய பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட்... மேலும் பார்க்க

மாதா அமிர்தானந்தமயிக்கு கேரள அரசு கௌரவம்!

ஐ.நா. அவையில் மாதா அமிர்தானந்தமயி உரையாற்றியதன் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கேரள அரசு அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபைக் கூட்டத்தில், கேர... மேலும் பார்க்க

ஒடிசாவில் ரூ.60,000 கோடியில் மேம்பாட்டுத் திட்டம்: பிரதமர் தொடங்கி வைத்தார்!

ஓடிசாவின் ஜர்சுகுடாவில் ரூ. 60,000 கோடிக்கும் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜர்சுகுடாவில் தொலைத்தொடர்பு, ரயில்வே மற்றும் உ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வர் சைகோ! அழைப்பிதழால் ஆளுங்கட்சி எம்எல்ஏ அதிருப்தி!

ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சைகோ என்று நந்தமூரி பாலகிருஷ்ணா குறிப்பிட்டது சர்ச்சையாகியுள்ளது.ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவையில், ``முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட... மேலும் பார்க்க

ஹைதராபாதில் வெள்ளம்! 1000 பேர் வெளியேற்றம்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் பெய்து வரும் கனமழையால், 1000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக, ஹிமாயத்... மேலும் பார்க்க