செய்திகள் :

போர் முடிவுக்குப் பிறகு பதவி விலகுவேன்; மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன்: ஸெலென்ஸ்கி

post image

ரஷியாவுடனான போர் முடிவுக்கு வந்தபிறகு அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவதாகவும் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கடந்த 2019ல் உக்ரைன் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 2024 பிப்ரவரியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ரஷியாவுடனான போர் நீடிப்பதால் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுதொடர்பாக பேசிய ஸெலென்ஸ்கி,

"ரஷியாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே முதல் இலக்கு. போர் முடிவுக்கு வந்த பிறகு நான் அதிபர் பதவியில் இருந்து விலகி விடுவேன். அதன்பிறகு மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். ஏனெனில் தேர்தல் என்பது என்னுடைய இலக்கு அல்ல. மக்களுடன் துணை நிற்பதே என்னுடைய குறிக்கோள்.

போர் காலத்தில் உக்ரைன் மக்களுக்கு துணையாக நிற்க விரும்புகிறேன். போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு உக்ரைனில் தேர்தலை நடத்த கோருவேன். அப்போது தேர்தல் நடத்த வாய்ப்பிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

பதவிக்காலம் முடிந்தும் அதிபர் பதவியில் ஸெலென்ஸ்கி நீடிப்பதாக ரஷியா பேசி வருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஸெலென்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், 'போருக்காக அமெரிக்காவிடமிருந்து சக்திமிக்க ஆயுதங்களை கோரியுள்ளோம். ரஷியா போரை நிறுத்தவில்லை என்றால் கிரெம்பிளினில் பணிபுரியும் ரஷிய அதிகாரிகள், தங்கள் அலுவலகத்துக்கு அருகில் பாதுகாப்பு இடம் எங்கே இருக்கிறது என தேட வேண்டி வரும்" என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ், 'இதைவிட பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை நாங்கள் பயன்படுத்தக்கூடும். பாதுகாப்பு இடங்களில்கூட தங்க முடியாது. இதனை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

President of Ukrain Volodymyr Zelenskyy Says Ready To Leave Presidency After Peace

இதையும் படிக்க | இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி: டிரம்ப் முடிவு - அக்.1 முதல் அமல்

கொலம்பியா அதிபரின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா! ஏன்?

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து செய்யப்போவதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைகளைத் தொடர்ந்து... மேலும் பார்க்க

அஸெஞ்ஜர் நிறுவனத்திலிருந்து 11,000+ ஊழியர்கள் நீக்கம்! சிஇஓவின் எச்சரிக்கை தகவல்

சர்வதேச முன்னணி பெரு நிறுவனங்களில் ஒன்றான அஸெஞ்ஜர், உலகம் முழுவதும் உள்ள தன்னுடைய நிறுவனங்களில் பணியாற்றி வந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கடந்த மூன்று மாதங்களில் பணிநீக்கம் செய்திருக்கிறது.ச... மேலும் பார்க்க

வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம்: 7 பேர் காயம், வீடுகள் சேதம்!

வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், லாங்சி மாவட்டத்தின் கன்சு மாகாணத்தில் இன்று அதிகாலை 5.4... மேலும் பார்க்க

இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி: டிரம்ப் முடிவு - அக்.1 முதல் அமல்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்க உள்ளதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தாா். இந்த வரி விதிப்பு நடைமுறை அக். 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரவுள்ளது... மேலும் பார்க்க

‘மேற்குக் கரையை இஸ்ரேல் இணைத்துக் கொள்ள அமெரிக்கா அனுமதிக்காது’

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டேன் என அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்தாா். ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் சில பகுதிகளையாவது இஸ்ரேல் அரசு தன்னுடன் இணைத்துக்... மேலும் பார்க்க

இந்தியாவுடன் விரிவான பேச்சுக்குத் தயாா்: ஐ.நா.வில் பாக். பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்

இந்தியாவுடன் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் முடிவு கிடைக்கும் வகையில், விரிவாகப் பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று ஐ.நா.வில் அந்நாட்டுப் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா். கடந்த ஏப்... மேலும் பார்க்க