மும்பை -அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் முழுமையாக திறக்கப்படும்: அஸ்வினி வைஷ்ணவ்
ரஷ்மிகா - ஆயுஷ்மானின் தம்மா டிரைலர்!
நடிகை ரஷ்மிகா மந்தனாவின் தம்மா படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.
சூப்பர் ஹீரோ கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.
தினேஷ் விஜயன், அமர் கௌசிக் தயாரிப்பில் உருவாகியுள்ள தம்மா படத்தினை ஆதித்யா சர்போட்கர் இயக்கியுள்ளார்.
மேட்டாக் ஹாரர் நகைச்சுவைப் படங்களான ஸ்ட்ரீ 2, முஞ்ஜியா படங்களைத் தொடர்ந்து தம்மா படமும் இந்த யுனிவர்ஸில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், பரேஷ் ராவல், நவாசுதீன் சித்திக், பைசல் மாலிக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
டிரைலரில் கிராபிக்ஸ் காட்சிகளும் ரஷ்மிகாவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு அக்.21ஆம் தேதி வெளியாகிறது.