மும்பை -அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் முழுமையாக திறக்கப்படும்: அஸ்வினி வைஷ்ணவ்
ஆஸ்திரேலியாவில் இசையமைப்பாளர் தேவாவுக்கு உயரிய மரியாதை!
இசையமைப்பாளர் தேவாவுக்கு, ஆஸ்திரேலிய அரசின் நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில், இசையமைப்பாளர் தேவாவின் இசைக்கச்சேரி இன்று (செப். 27) நடைபெறுகிறது. இதற்காக, தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெயிட் நகரத்துக்கு அவர் தனது இசைக்குழுவுடன் சென்றுள்ளார்.
இந்த நிலையில், தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையத்தின் சார்பில், ஆஸ்திரேலிய அரசின் நாடாளுமன்றத்துக்குள் இசையமைப்பாளர் தேவா மற்றும் அவரது இசைக்குழுவினர் வரவேற்கப்பட்டனர்.
அப்போது, இசையமைப்பாளர் தேவா நாடாளுமன்ற அவைத் தலைவரின் இருக்கையில் அமர வைக்கப்பட்டதுடன், அவரிடம் செங்கோல் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
இதுபற்றி, இசையமைப்பாளர் தேவா கூறுகையில், இந்த மரியாதை எனக்கு மட்டுமல்ல, இசை மற்றும் கலாசாரத்தை உலகெங்கிலும் பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் சொந்தம் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: நெட்ஃபிளிக்ஸ் உடன் கைகோர்க்கும் மத்திய அரசு! ஏன்?