செய்திகள் :

2026: திமுக-வில் சீனியர்களுக்கு வேட்டு? ; பொன்முடியின் ‘சீட்’ பேச்சு - பின்னணி என்ன?!

post image

`சீட் கிடைக்காமல் போகலாம்!'

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும், அமைச்சருமான பொன்முடி பேசும்போது, "விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஏழு சட்டமன்றத் தொகுதியில் இப்போது நான்கு சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே திமுக வெற்றிபெற்றிருக்கிறது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த ஏழு தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற வேண்டும். 200 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார். தலைமை அறிவித்த தொகுதி பொறுப்பாளர்கள் இங்கிருந்து பணியாற்றுவார்கள்.

அமைச்சர் பொன்முடி

வரும் சட்டமன்ற தேர்தலில் யார் வேண்டுமென்றாலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம். எனக்கே கூட சீட் கிடைக்காமல் போகலாம். இந்த மாவட்டத்தில் இருக்கும் ஏழு தொகுதிகளில் திமுக மற்றும் நம் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் யார் போட்டியிட்டாலும் அவர்கள்தான் வெற்றிபெற வேண்டாம். கட்சிக்குள் உட்கட்சி பூசல், கருத்துவேறுபாடு என எது இருந்தாலும் அதனைத் தூக்கியெறிந்து முழு ஈடுபாட்டுடன் தேர்தல் பணிகள் செய்யவேண்டும். திமுக அரசின் சாதனைகளைச் சொல்லி, திண்ணை பிரசாரத்தில் ஈடுபடவேண்டும். நாம் ஒருங்கிணைத்து பணியாற்றினால் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் கண்டிப்பாக வெற்றிபெறும்" என்று பேசியிருந்தார்.

`சீனியர் - ஜூனியர் உரசல்’

`பொன்முடி பேசியிருப்பதின் பின்னணி என்ன?’ என்பது குறித்து திமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், "திமுகவில் கடந்த சில மாதங்களாகவே சீனியர் ஜூனியர் பஞ்சாயத்துக்குக் கொஞ்சம் கூட பஞ்சமில்லை என்பதுபோலவே அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக அமைச்சர் எ.வ.வேலு புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினி பேசும்போது துரைமுருகனைக் குறிப்பிட்டு 'அவர் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆடியவர்' என்று சொன்ன ஒரு கருத்தும், சீனியர் என்ற கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்ததாக உதயநிதி ஒரு கட்சி நிகழ்ச்சியில் பேசும்போது, 'கட்சியில் உள்ள மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டுக் கைபிடித்து அழைத்துச் செல்லவேண்டும்' என்று பேசினார்.

துரைமுருகன் உதயநிதி

இதனைத் தொடர்ந்தே கட்சிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. நடந்து முடிந்த அமைச்சரவை மாற்றத்திலும் மூத்த அமைச்சர்களின் இலாக்கா மாற்றப்படும் என்று பெரிதாகப் பேசப்பட்டது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படும்போது அவருக்குக் கூடுதலாக சில துறைகள் வழங்கப்படும். அதற்கு சீனியர்கள் சிலரின் துறைகள் மாற்றப்படும் என்று பேசப்பட்டது. இந்த மாற்றத்தில் சீனியர்கள் பலரிடமும் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், மூத்த அமைச்சர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். கடைசியாக முதல்வர் அனைவரிடத்திலும் பேசி சரி செய்த நிலையிலேயே துறைகள் எதுவும் யாருக்கும் பெரிதாக மாற்றப்படவில்லை.

திமுக சார்பில், வரும் சட்டமன்ற தேர்தலுக்காக இப்போதிலிருந்தே தொகுதி பொறுப்பாளர்கள் நியமிப்பது தொடங்கி பல்வேறு தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது. அடுத்ததாக மாவட்டச் செயலாளர்கள் மாற்றமும் கூடிய விரைவில் நடைபெறும். இவையனைத்துமே வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களைக் கைப்பற்றவேண்டும் என்பதற்காகவே. பொன்முடியைப் பொறுத்தவரை, இந்தமுறை கௌதம சிகாமணி எம்.பி தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக்கப்பட்டார். அவருக்கு இந்த முறை சட்டமன்ற உறுப்பினர் சீட் வழங்க வாய்ப்பிருக்கிறது. இந்த முறை பல சீனியர்களும் தங்கள் வாரிசுகளுக்குத் துண்டு போட்டு வைத்திருக்கிறார்கள்.

கௌதமசிகாமணி

இளைஞரணி மாநாடு சமயத்திலிருந்து இளைஞர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் உதயநிதி. இப்போது அவர் துணை முதல்வராகியிருக்கிறார். வரப்போகும் தேர்தலில் அவரின் கை வழக்கத்துக்கு மாறாகச் சற்று ஓங்கியே இருக்கும். அதற்காக இப்போது இருக்கும் மூத்தவர்கள் அனைவரும் ஒதுக்கப்படுவார்கள் என்பது அர்த்தமில்லை. கடைசியில் மூத்தவர்களா அல்லது அவர்களின் வாரிசுகளா என்று வந்து நிற்கும். முன்பே சொன்னதுபோல இந்த தேர்தலில் உதயநிதி பெரிதாக முன்னிறுத்தப்படுவர். அதேபோல, வேட்பாளர் தேர்விலும் உதயநிதியின் பங்குபெறுமளவில் இருக்கும். அவர் இளைஞர்களுக்கு வாய்ப்பு என்று சொல்லும் நிலையில், வரும் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் வேட்பாளர் தேர்வில் அனைவரையும் சரிக்கட்டிச் சமாளிப்பது கொஞ்சம் கடினமாகவே இருக்கப்போகிறது" என்றார்கள் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: `ஆளுநருக்குச் சில கேள்விகள்..!" - முதல்வர் ஸ்டாலின்

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தின... மேலும் பார்க்க

ஸ்டாலினிடம் சரணடைந்த Thiruma, Congress, CPM, CPI? கொதிக்கும் நிர்வாகிகள் - கூட்டணி குஸ்தி! JV Breaks

திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக உள்ளிட்ட மெகா கூட்டணி அமைத்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. திமுக ஆட்சியின் மீதும் எக்கச்சக்கமான புகார்கள், குற்றச்சாட்டுகள் உள்ளன . விசிக மது ஒழிப்பு ... மேலும் பார்க்க

`இந்தி திணிக்கப்படவில்லை... தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்கும் முயற்சி நடக்கிறது' - ஆளுநர் ரவி

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடு, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி இந்த நிகழ்ச்சியில... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: `பக்திச் சிரத்தையோடும், துல்லியமாகவும் பாடுவேன்' - ஆளுநரின் பதில்

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தின... மேலும் பார்க்க

`எங்கள் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ்; திமுக-வில் யார் ஸ்டாலினா... உதயநிதியா?' - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

"மீண்டும் அதிமுக ஆட்சி மலர தடையாய் இருந்தவர்கள் இன்றைக்கு கட்சி வேட்டி கட்டமுடியாமல் தெருவில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்..." என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்... மேலும் பார்க்க