செய்திகள் :

'2027-க்குள் 4 லட்சம் மெகா சார்ஜிங் பாயின்ட்கள் அமைக்கப்படும்!'- TATA.ev Mega Charger திட்டம்

post image

டாடா.ev நிறுவனம் தனது முதல் 10 மெகா சார்ஜர்களை இன்ஸ்டால் செய்திருக்கிறது! EV பயணங்களை எளிதாக்குகிறது புதிய ஹைஸ்பீடு சார்ஜிங் நிலையங்கள். இந்த ஹைஸ்பீடு சார்ஜிங் நிலையங்கள், 2027-க்குள் நாடு முழுவதும் 4 லட்சம் சார்ஜிங் பாயின்ட்கள் அமைக்கப்படும் என்பது டாடா.ev-யின் வாக்குறுதியின் ஒரு பகுதியாகும்.

Tata.ev & ChargeZone MegaCharger
Tata.ev & ChargeZone MegaCharger

டாடா.ev, இன்று தனது முதல் 10 மெகாசார்ஜர் நிலையங்களை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தது. ChargeZone மற்றும் Statiq ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நிறுவப்பட்டுள்ள இந்த ஹைஸ்பீடு சார்ஜிங் நிலையங்கள், 2027-க்குள் நாடு முழுவதும் 4 லட்சம் சார்ஜிங் பாயின்ட்கள் அமைக்கப்படும் என்பது டாடா.ev-யின் வாக்குறுதியின் ஒரு பகுதியாகும்.

இந்த புதிய ‘TATA.ev MegaCharger’ திட்டம், முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் நகர பகுதிகளில் உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இடையே சார்ஜ் குறையுமோ என்ற பயம் இல்லாமல், நீண்ட தூர பயணங்கள் செய்யும் EV பயணிகளுக்கு உதவியாக இருக்கும். இந்த மெகாசார்ஜர் திட்டம், இந்தியாவின் EV வளர்ச்சியை வேகமாக முன்னோக்கி கொண்டு செல்லும் முக்கியமான படியாகும். விரைவில் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான நெடுசாலைகளில் 'TATA.ev MegaCharger' திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

Tata.ev and Statiq MegaCharger
TATA.ev and ChargeZone - TATA.ev and ChargeZone team at the TATA.ev MegaCharger launch in Shreenath Food Hub in Vadodara

மெகாசார்ஜர் சிறப்பம்சங்கள்:

குறைந்தபட்சம் 120kW ஹைஸ்பீடு சார்ஜிங்


25% டிஸ்கவுண்ட் TATA.ev வாடிக்கையாளர்களுக்கு


iRA.ev செயலி மூலம் அனைத்து சார்ஜிங் பாயின்ட்களுக்கும் அணுகல்


24x7 தொழில்நுட்ப ஆதரவு & மானிட்டரிங்


சில இடங்களில் சார்ஜிங் உதவிக்கான பணியாளர்கள்
சுகாதார வசதிகள், உணவகங்கள், Wi-Fi, காபி ஷாப்கள் போன்ற வசதிகளுடன் கூடிய இடங்கள்.

Tata.ev and Statiq MegaCharger
Tata.ev and Statiq MegaCharger

முக்கிய சார்ஜிங் பாயின்ட்கள் பகுதிவாரியாக:

மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலை: ChargeZone உடன் இணைந்து, மூன்று மெகாசார்ஜர்கள். 400 kW, ஒரே நேரத்தில் 6 வாகனங்கள் சார்ஜ் செய்யலாம். மொத்தம்: 500 கி.மீ பயணத்திற்குள் 150–200 கி.மீ இடைவெளியில் அமைந்துள்ளவை.

1. Vadodara - Shreenath Food Hub
2. Vapi - Shanti Complex
3. Ghodbunder - Hotel Xpress Inn

டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை: Statiq உடன் இணைந்து, நான்கு மெகாசார்ஜர்கள். 60 கி.மீ இடைவெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட EV சார்ஜிங் ஹப்கள்.


4. Gurugram - SS Plaza
5. Kaprivas - Hotel Old Rao
6. Hamzapur - Asli Pappu Dhaba
7. Shahpura - Hotel Highway King

பூணே - நாசிக் நெடுஞ்சாலை:
8. Rajgurunagar – Akash Misal House (ChargeZone உடன்)

பெங்களூரு நகரம்:
9. Electronic City – Monk Mansion (Statiq உடன்)

உதயபுர் நகரம்:
10. Ramee Royal Resort - சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகளுக்காக அமைக்கப்பட்டது

Tata.ev & ChargeZone MegaCharger
TATA.ev and Statiq MegaCharger - TATA.ev and Statiq team at the TATA.ev MegaCharger launch in Hamzapur

டாடா.ev நிறுவனத்தின் தலைமை திட்ட அதிகாரி பாலாஜி ராஜன் கூறுகிறார்:
“இந்த முதல் 10 மெகாசார்ஜர்கள், இந்தியாவின் முக்கிய EV வழித்தடங்களில் தொடங்கப்பட்ட முதல் கட்ட செயல் திட்டமாகும். EV பயணிகளை சார்ஜிங் குறைபாடுகளிலிருந்து விடுவிக்க எங்களது பார்வை இதுவே. இப்போதுதான் ஆரம்பிக்கிறோம்!”

Statiq நிறுவனத்தின் CEO, அக்ஷித் பன்சல்:
“இந்த கூட்டணியின் மூலம் நாடு முழுவதும் நம்பிக்கையூட்டும் சார்ஜிங் நெட்வொர்க் உருவாகும்.”

ChargeZone நிறுவனத்தின் MD கார்த்திகேய ஹரியாணி:
“NH48 பைபாஸ் வேயில் உள்ள எங்கள் முதல் Co-branded SuperCharging ஸ்டேஷன் தொடங்கப்பட்டிருப்பதில் பெருமை கொள்கிறோம்.”

Toll gate: இனி FASTag பதிலாக GPS தொழில்நுட்பம்.. மக்களுக்கு பயனளிக்குமா?

நெடுஞ்சாலையில் சுங்க கட்டணத்தை வசூலிக்கும் தற்போது உள்ள ஃபாஸ்ட் டேக் முறைக்கு மாற்றாக புதிய சேட்டிலைட் தொழில்நுட்பத்தை (GPS) அறிமுகப்படுத்தவுள்ளது இந்திய அரசு.மணிக்கணக்காக டோல்களில் வரிசையில் நிற்க வே... மேலும் பார்க்க

Mahindra Thar & XUV 700: Facelift வெர்சனுக்காகக் காத்திருக்கிறீர்களா? உங்களுக்கு தான் இந்த செய்தி

மஹிந்திரா XUV700 அறிமுகமான சில ஆண்டுகளில் நாட்டின் விருப்பமான XUV பட்டியலில் தனக்கென தனி இடம் பிடித்த கார். அதேபோல தாரும். மக்களின் பேவரைட்டான இந்த கார்களின் பேஸ்லிப்ட் (அப்கிரேடட்) வெர்சன் எப்போது வர... மேலும் பார்க்க