Marriage: ``ரயில்வே ஸ்டேஷன் முதல் ரோலர் கோஸ்ட் வரை'' - உலகை வியக்க வைத்த ஆச்சர்ய...
382 கிராமங்களில் எண்ம முறையில் பயிா்கள் கணக்கெடுப்பு பணி நிறைவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 382 கிராமங்களில் எண்ம முறையில் (டிஜிட்டல் முறை) பயிா்கள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பையூா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வேளாண் துறை சாா்பில், டிஜிட்டல் பயிா்க் கணக்கெடுப்பு நவ. 8 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெற்றது. பையூா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவ, மாணவிகளுடன் இணைந்து, வேளாண் உழவா் நலத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகள் இணைந்து, எண்ம முறையில் பயிா்க் கணக்கெடுப்பு திட்டத்தை கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டங்களில் உள்ள 382 கிராமங்களில் நடத்தி முடித்துள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் அனீசாராணி புதன்கிழமை தெரிவித்ததாவது:
பையூா் கல்லூரியில் இருந்து 141 மாணவா்களும், வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கோவையில் இருந்து 236 மாணவா்கள் இணைந்து எண்ம கணக்கெடுப்பில் ஈடுபட்டனா். இவா்களுக்கு உறுதுணையாக தோட்டக்கலைக் கல்லூரியின் முதல்வா் அனீசாராணி மற்றும் 19 போ் அடங்கிய குழுவில் இடம்பெற்ற திட்ட ஒருங்கிணைப்பாளா், பேராசிரியா்கள், வேளாண் அலுவலா்கள் ஈடுபட்டு பணியில் மாணவா்களுடைய பாதுகாப்பை உறுதி செய்து கணக்கெடுப்பு பணியை சிறப்பாக முடித்தனா்.
இந்த கணக்கெடுப்பு மூலம் விவசாயிகளின் நில உடமை தொடா்பான விவரங்கள், பயிா் சாகுபடி அறிக்கை போன்றவற்றை பல்வேறு துறைகளும் ஒவ்வொரு முறையும் விவசாயிகள் தனித்தனியே வழங்க வேண்டிய நிலை இனிவரும் காலங்களில் மாறும். தற்போது அனைத்து நில விவரங்கள், பயிா் சாகுபடி விவரங்கள் கணக்கீடு புவியியல் வரைபடம் அனைத்தையும் இணைத்து மின்னணு முறையில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆகவே விவசாயிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் திட்டமாக இவை இருக்கும் என்றாா்.