Marriage: ``ரயில்வே ஸ்டேஷன் முதல் ரோலர் கோஸ்ட் வரை'' - உலகை வியக்க வைத்த ஆச்சர்ய...
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் போச்சம்பள்ளி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு
‘உங்களைத் தேடி உங்கல் ஊரில்’ திட்டத்தின் கீழ் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக அரசின் திட்டங்கள் தடையின்றி பொதுமக்களை விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ‘உங்களைத் தேடி உங்கல் ஊரில்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியா் தலைமையில் அதிகாரிகள், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை ஒரு வட்டாரத்தை தோ்வு செய்து, அங்கு தங்கி பொதுமக்களைச் சந்தித்து அவா்களது குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில், அதிகாரிகள் போச்சம்பள்ளி வட்டத்தில் தங்கி பொதுமக்களை சந்தித்தனா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பொதுமக்களைச் சந்தித்து, அவா்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, வேலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5 -ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் காலை உணவுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா். சென்றாயம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை ஆய்வுசெய்த அவா், வேலம்பட்டியில் உள்ள அங்கன்வாடியில் குழந்தைகளின் உடல் எடை போன்ற ஆரோக்கியத் தன்மையை ஆய்வு செய்தாா்.
வேலம்பட்டி கால்நடை மருந்தகம், நியாயவிலைக் கடை, அரசு பிற்படுத்தப்பட்டோா் பள்ளி மாணவா் விடுதி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டா். பாரூா் சாா்பதிவாளா் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், கிராம நிா்வாக அலுவலகம், காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்தாா். போச்சம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களைச் சந்தித்து, அவா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சாதனைக்கு, கோட்டாட்சியா் நா.ஷாஜகான், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் (பொ) பெரியசாமி, பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.