செய்திகள் :

Ayodhya: "அயோத்தி வழக்கு விசாரணையின்போது தினமும் கடவுளை வேண்டுவேன்..." - நீதிபதி சந்திரசூட்

post image

அயோத்தி என்றதும் பாபர் மசூதி வழக்குதான் நினைவுக்கு வரும் அளவு, நீண்ட காலம் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையிலேயே இருந்தது. மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு, தேர்தலைச் சந்திக்கும்போதெல்லாம் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய இடம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்பதுதான். நீண்டகாலம், அயோத்தியைச் சுற்றியே பல்வேறு அரசியல்கள் நடந்தன. பிரசார ஆயுதமாகப் பல தேர்தல்களில் வலம்வந்தது இந்த வழக்கு.

இந்த வழக்கில் நவம்பர் 9, 2019 அன்று, அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதித்தது.

அயோத்தி வழக்கு

மேலும், முஸ்லிம்களுக்கு வேறொரு இடத்தில் மசூதி கட்டுவதற்கு இடமளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தது. இந்த தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது என்றாலும், தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில், தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட்டும் இருந்தார்.

இந்த நிலையில், அடுத்த மாதம் ஓய்வுபெறப்போகும் சந்திரசூட்டுக்கு மகாராஷ்டிரா மாநிலம் கெட் தாலுகாவில் உள்ள அவரின் சொந்த ஊரான கன்ஹெர்சர் கிராமத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், "பாபர் மசூதி வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்தது. எங்களிடம் அடிக்கடி இதுபோன்ற சிக்கலான வழக்குகள் வரும். ஆனால் அதற்கு நாங்கள் உடனடியாகத் தீர்வுக்கு வருவதில்லை.

அயோத்தி வழக்கு மூன்று மாதங்களாக என் முன்னே இருந்தபோது, நான் கடவுளின் முன் அமர்ந்து, 'இந்த வழக்கில் ஒரு தீர்வு வர வேண்டும்' என வேண்டினேன். அதன்பிறகே அந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. என்னை நம்புங்கள், உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தால், கடவுள் எப்போதும் உங்களுக்கும் ஒரு வழியைக் காட்டுவார்." எனக் குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

``நியோமேக்ஸ் சொத்துகளை இதுவரை முடக்காதது ஏன்?'' - அரசாணை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

"நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கி வழக்கில் இணைக்கவில்லையென்றால் உள்துறைச்செயலாளர், பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும்" என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பர... மேலும் பார்க்க

``நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள்தான், ஆனால்..." - நீதிபதி சந்திரசூட்

இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சந்திரசூட் அவர்களின் பதவிக்காலம் வரும் நவம்பர் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் உத்யோகப்பூர்வ பயணமாக பூடான் சென்ற நீதிபதி ... மேலும் பார்க்க

Chandrachud: 'எனக்கு பின்..!' - CJI பதவிக்கு சந்திரசூட் பரிந்துரைத்த சஞ்சீவ் கண்ணா - யார் இவர்?

"கடந்த இரண்டு ஆண்டுகளாக, என் நாட்டிற்கு சேவை புரிந்தப்பின் வரும் நவம்பர் மாதம் நான் ஓய்வு பெறுகிறேன்.என்னுடைய இந்த இரண்டு ஆண்டு பணிக்காலத்தை நிறைவாகவும், சிறப்பாகவும் செய்துள்ளேன். ஆனாலும், என் மனதில்... மேலும் பார்க்க

Karnataka: "பள்ளிவாசலில் ஜெய் ஸ்ரீராம் என முழங்கினால் மத உணர்வுகள் புண்படுமா?" - நீதிமன்றம் கேள்வி

கர்நாடக மாநிலம் தக்‌ஷின் கன்னடா மாவட்டத்தில் இருக்கும் காவல் நிலையம் ஒன்றில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரில், "இரவு 10:30 மணிக்கு மேல் இருவர் பள்... மேலும் பார்க்க