பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
Basics of Share Market 12: டிமேட், டிரேடிங் கணக்கு என்றால் என்ன?!
பங்குச்சந்தையில் இரண்டு கணக்குகள் மிக மிக முக்கியம். ஒன்று, டிமேட் கணக்கு. இன்னொன்று, டிரேடிங் கணக்கு. இந்த இரண்டை பற்றியும் தெரிந்துகொள்வோம். வாங்க...
முதலில், டிமேட் கணக்கு. நீங்கள் நிலங்கள் நிறைய வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்றும், அதன் பத்திரங்களை ஒரு பெட்டியில் சேமித்து வைத்திருக்கிறீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம்.
இந்த நிலங்களோடு இன்னும் கொஞ்சம் நிலம் வாங்கினால், அந்த பெட்டியில் இன்னும் கொஞ்ச பத்திரங்கள் சேரும். ஒருவேளை, விற்றால் அதில் உள்ள பத்திரங்களின் எண்ணிக்கை குறையும். ஆனால், நீங்கள் எப்போது அந்த பெட்டியை திறந்து பார்த்தாலும், எத்தனை நிலங்கள் வைத்திருக்கிறீர்கள்... அவை எங்கே உள்ளது ஆகிய அத்தனை தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும். ஆக, இந்த பெட்டி தான் டேமேட் கணக்கு. நீங்கள் வாங்கி இருக்கும் பங்குகள் மற்றும் அதன் தகவல்கள், இந்த கணக்கில் தான் சேமிக்கப்பட்டிருக்கும்.
அடுத்து, டிரேடிங் கணக்கு.
ஒரு பங்கு வாங்க, விற்க பரிவர்த்தனை நடக்க வேண்டுமல்லவா...அந்த பரிவர்த்தனை நடக்கும் இடம் தான் டிரேடிங் கணக்கு. இந்த கணக்கு பிரோக்கர்களால் வழங்கப்படும். நீங்கள் பங்கை வாங்க காசு கொடுக்க இந்த கணக்கை தான் பயன்படுத்த வேண்டும். நீங்கள் பங்கை விற்றால், இந்த கணக்கிற்கு தான் பணம் வந்து சேரும்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், நீங்கள் ஒரு பங்கை வாங்குகிறீர்கள் என்றால், உங்களது பெர்சனல் வங்கி கணக்கில் இருந்து, இந்த டிரேடிங் கணக்கிற்கு காசு அனுப்புவீர்கள். இங்கே பரிவர்த்தனை முடிந்தவுடன், உங்கள் டிமேட் கணக்கில் பங்கு வந்து சேர்ந்துவிடும். இந்த நடைமுறை கொஞ்சம் திருப்பி போட்டு பார்த்தால் பங்கு விற்பனை. பங்கு விற்கிறீர்கள் என்றால் உங்களது டிமேட் கணக்கில் இருந்து பங்கு சென்றுவிடும். டிரேடிங் கணக்கிற்கு பணம் வரும். பின்னர் டிரேடிங் கணக்கில் இருந்து உங்கள் பெர்சனல் வங்கி கணக்கிற்கு சென்றுவிடும்.
அவ்வளவுதாங்க!
திங்கட்கிழமை: NSDL, CSDL... - பங்குச்சந்தையில் இருக்கும் முக்கியமான அமைப்புகள்!