Bank Scam: `மரண தண்டனையை ரத்துசெய்ய 9 பில்லியன் அமெரிக்க டாலர்' - ட்ருங் மை லான்...
Basics of Share Market 44: `அசெட் அலோகேஷன் முதல் டைவர்சிஃபிகேஷன் வரை...' - நிறைவு பகுதி!
முதலீடுகள் என்று வரும்போது பங்குச்சந்தை மட்டும் தான் ஒரே முதலீட்டு ஏரியா என்பது இல்லை. தங்கம், ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற பல முதலீட்டு ஆப்ஷன்கள் உள்ளன.
உங்கள் வயது, அப்போது எடுக்க முடிகிற ரிஸ்க் - இரண்டையும் பொறுத்து உங்கள் முதலீட்டை அமையுங்கள். ஆரம்பத்தில் வெளியாகிய அத்தியாயங்களில் ஒன்றிலேயே 100 மைனஸ் உங்கள் வயது என்ற ஃபார்முலாவை பார்த்திருக்கிறோம். இப்படி கழித்தவுடன் வரும் எண்ணை எடுத்துகொள்ளுங்கள். அத்தனை சதவிகிதத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்துவிட்டு, மீதி தொகையை தங்கம், ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள். இதன் பெயர் தான் அசெட் அலோகேஷன்.
பங்குச்சந்தை முதலீட்டில் 'டைவர்சிஃபிகேஷன்' என்ற கான்சப்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரே நிறுவனம், ஒரே துறை பங்கு போன்றவற்றில் முதலீடு செய்யாமல் நன்கு ஆராய்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனம், ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளில் முதலீடு செய்யுங்கள். அப்போது தான் ஒன்று காலை வாரினாலும், இன்னொன்று காப்பாற்றும்.
இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை வெளிவந்த அத்தியாயங்கள் மூலம் பங்குச்சந்தை என்றால் என்ன, அதன் முதலீடு, அதில் இருக்கும் டெக்னிக்ஸ் ஆகியவற்றின் அடிப்படை உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த அடிப்படையை வைத்து நீங்கள் சூப்பர் பங்குச்சந்தை முதலீட்டாளர் ஆக வாழ்த்துகள். ஹேப்பி டிரேடிங்!
- முற்றும்!