செய்திகள் :

BB Tamil 8: `தர்ஷா தமிழ்நாட்டுக்கு வந்த கதை பற்றி உங்களுக்குத் தெரியுமா?' - ரவீந்தர் ஓப்பன் டாக்

post image

பிக்பாஸ் சீசன் 8-லிருந்து இரண்டாவதாக வெளியேறிய போட்டியாளர் ரவீந்தர். இவருடைய கேம் பிளான் பலருக்கும் பிடித்திருந்தது. பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் குறித்து ரவீந்தரிடம் பல கேள்விகள் முன்வைத்திருந்தோம். அவரும் வெளிப்படையாகவே பகிர்ந்திருந்தார். அவரிடம் பேசியதிலிருந்து...

Ravindar

"தர்ஷா தமிழ்நாட்டுக்கு வந்த கதை பற்றி உங்களுக்குத் தெரியுமா? தர்ஷா தமிழ்நாட்டுக்கு பிளவுஸ் தைக்க தான் வந்தாங்களாம். அவங்க பெங்களூரில் டீச்சராக ஒர்க் பண்ணிட்டிருந்தாங்களாம். பாண்டி பஜார்ல ஜாக்கெட் தைக்கிறதுக்காகத்தான் சென்னைக்கு வந்திருக்காங்க. வந்த இடத்துல ஒருத்தர் நீங்கள் சினிமாவுக்கு, மாடலிங்கிற்கு போலாமேன்னு சொல்ல அப்படித்தான் அவங்க சினிமாவுக்குள்ள வந்தாங்களாம். இப்படி ஆரம்பத்தில் வெளிப்படையாக அவங்களைப் பற்றி சொன்னவங்க, கன்டென்ட் பண்ணுன்னு சொன்னப்ப மேகி கன்டென்ட் பண்றாங்க. அது ரெண்டு நிமிஷத்துக்கு மேல நிற்கவும் மாட்டேங்குது. நல்ல பாய்ண்ட் பேச வேண்டிய இடத்துல பேச மாட்டாங்க. பேசவே கூடாதுங்கிற இடத்தில் பேசுவாங்க. பல நேரங்களில் அவங்களை வச்சு காமெடி நடந்திருக்கு. கேமரா இல்லைங்கிறது கூட தெரியாம தனியா பெர்ஃபார்ம் பண்ணிட்டிருப்பாங்க. அவங்க போடுற பாதி சண்டை ஃபேக் ஆகத்தான் இருக்கும். செளந்தர்யா மாதிரி இல்லாம நாம ஏதாவது பண்ணனும்னு தர்ஷா ட்ரை ஆச்சும் பண்றாங்களே!" என்றவரிடம் ரிலேஷன்ஷிப் குறித்துக் கேட்டோம்.

"இந்த சீசன்ல அண்ணன் - தங்கச்சி, கேர்ள் ஃப்ரெண்ட் - பாய் ஃப்ரெண்ட்னு எந்த ரிலேஷன்ஷிப்பும் ஒர்க்அவுட் ஆகாது!" என்றவரிடம் வைல்டு கார்டு வாய்ப்பு வந்தா போவீங்களா?னு கேட்டோம்.

ரவீந்தர்

"நான் ஹெல்தியா இருக்கேன். நீங்க எதிர்பார்க்கிற தேவைப்படுற என்டர்டெயின்மென்ட் நான் கொடுக்கிறேன். ஆக்சுவலி இருந்திருந்தா ரெண்டாவது வாரத்துல ஒரு பிளே பண்ணனும்னுலாம் பேசி வச்சிருந்தேன். நான் எமதர்மன், சுனிதா சித்திரகுப்தன். அந்த மாதிரி கான்செப்ட்ல ஒரு பிளே ஜாலியா பண்ணலாம்னு பேசியிருந்தோம். எப்ப வைல்டு கார்டு வாய்ப்பு கிடைச்சாலும் கண்டிப்பா போய் நீங்க நினைக்கிறதை கொடுப்பேன்!" என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து ரவீந்தர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்! 

திருமணத்தை நிறுத்திய `வாணி ராணி' ஜெனிப்ரியா; ஏமாற்றினாரா சிங்கப்பூர் பைலட் - நடந்தது என்ன?

வாணி ராணி', 'அழகு' முதலான பல சீரியல்களில் நடித்தவர் நடிகை சாரா என்ற ஜெனிப்ரியா. 'ராஜ மன்னார் வகையறா' தொடரில் லீட் ரோலில் நடித்தார். பிறகு சினிமா முயற்சியில் இறங்கினார். 'தமிழ்ப்படம் 2' உள்ளிட்ட சில பட... மேலும் பார்க்க

BB Tamil 8: தீபாவளிக்கு வைல்டு கார்டு என்ட்ரி! 'பிக் பாஸ்' செல்கிறாரா `எவிக்ட்’ ஆனவரின் மனைவி?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 அக்டோபர் 6-ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது. அர்னவ், ரவீந்தர், தர்ஷா குப்தா, பவித்ரா ஜனனி உள்ளிட்ட பதினெட்டுபேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்கள்.அடுத்த... மேலும் பார்க்க

Siragadikka aasai: முத்து - மீனா கொடுத்த அதிர்ச்சி; பல்ப் வாங்கிய ரோகிணி!

சிறகடிக்க ஆசை நேற்றைய (அக்டோபர் 23) எபிசோடில் ரோகிணி - மனோஜ் திருமண நாள் மற்றும் பிஸ்னஸ் பார்ட்டியில் குடும்பமாக அனைவரும் கலந்து கொள்ள ஒப்புக் கொள்கின்றனர். ஆரம்பத்தில் மீனாவும் ஸ்ருதியும் ஒப்புக்கொள்... மேலும் பார்க்க

BB Tamil Day 17: 'போடா - போடி' ஜெஃப்ரிக்கும் சாச்சனாவிற்கும் சண்டை; ‘திண்டுக்கல் ரீட்டா’வாக விஷால்

ஹோட்டல் டாஸ்க்கில் பெண்கள் அணி ஓவர் அலப்பறை செய்தது. ஆண்களைப் பழிவாங்குவது போலவே நடந்து கொண்டதைப் போல் தெரிந்தது. எழுதுவதற்கு இடம் போதாத அளவிற்கு பலகையில் நிறைய புகார்களை எழுதிக் குவித்தார்கள். இந்த ம... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: `standby arunprasath' - வீடியோ பகிர்ந்து அருணுக்கு ஆதரவளித்த அர்ச்சனா

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 அக்டோபர் 6ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது. அர்னவ், ரவீந்தர், தர்ஷா குப்தா, பவித்ரா ஜனனி உள்ளிட்ட பதினெட்டுப் பேர் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.Bigg ... மேலும் பார்க்க

Serial Update: `அன்று வருத்தம்; இன்று வாய்ப்பு'- சன் டி.வியின் புதிய சீரியல்; மீண்டும் இணையும் ஜோடி

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி சினிமா, சீரியல் என இப்போது வரை பிஸியாக இருப்பவர் நீலிமா ராணி. சன், ஜீ தமிழ் உள்ளிட்ட முக்கிய சேனல்கள் எல்லாவற்றிலும் இவர் நடித்த சீரியல்கள் ஒளிபரப்பாகி உள்ளன.ஆரம்... மேலும் பார்க்க