பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை`ஹேமா ராஜ்குமார்' லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ் | Al...
Bigg Boss Tamil 9: 2 வது வார எவிக்ஷன்; வெளியேறிய போட்டியாளர் யார்?
விஜய் டிவியில் 20 போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரம் ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 9 சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
வி ஜே பார்வதி, கானா வினோத், திவாகர் உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரமே இரண்டு பேர் வெளியேறி விட்டனர். நந்தினி வெளியேறியதற்கான சரியான காரணம் தெரியவில்லை. பிரவீன் காந்தியோ முதல் வார எவிக்ஷனில் வெளியேறி விட்டார்.

தொடர்ந்து இந்த வார எவிக்ஷனுக்கான பட்டியலில் அரோரா, உள்ளிட்ட பலர் இடம் பிடித்திருந்த நிலையில் விஜய சேதுபதி கலந்து கொண்ட வீக் எண்ட் எபிசோடுக்கான ஷூட்டிங் நேற்று பிக் பாஸ் செட்டில் நடந்தது.
கடந்த வாரம் நடந்த பஞ்சாயத்துகளை முற்பகலில் பைசல் செய்து வைத்தார் விஜய் சேதுபதி. பிறகு எலிமினேஷனுக்கான நேரம் வந்தது. தீபாவளியை முன்னிட்டு எவிக்ஷன் இருக்காது என முதலில் ஒரு தகவல் உலா வந்தது. ஆனால் அப்படி எந்த சலுகையையும் பிக் பாஸ் அளிக்கவில்லை.
ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் அப்சரா வெளியேற்றப்பட்டிருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அரோரா, அப்சரா இருவரில் ஒருவர் வெளியேறலாமென பலரும் கணிக்கத் தொடங்கியிருந்த நிலையில் அரோரா தப்பித்துவிட்டார்.

இரு தினங்களுக்கு முன் நிகழ்ச்சியில் தன் கதையைப் பகிர்ந்த அப்சராவைப் பொறுத்தவரை விளையாட்டை சுமாராகத்தான் ஆடினார் என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை சேஃப் கேம் ஆடுவது ஓ.கே. ஆனால் கன்டென்ட் தரவேண்டும் என்பது எதிர்பார்க்கப்படும் ஒன்று. இவர் கன்டென்ட் தந்ததாகத் தெரியவில்லை. அப்சரா வெளியேறிய எபிசோடு இன்று இரவு வெளியாகவிருக்கிறது.