செய்திகள் :

Canada: `எங்கள் அதிகாரிகள் குற்றவாளிகள் என்பதை விட நம்பகத்தன்மையற்றவர்கள்...' - ஜஸ்டின் ட்ரூடோ

post image

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனட குடியுரிமைப் பெற்ற சீக்கியர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைசெய்யப்பட்டார். இதில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக நம்பகமான ஆதாரங்கள் இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். அப்போது இந்தியா - கனடா உறவில் விரிசல் விழுந்தது. அந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதே நேரம் கனடா நாட்டு அரசின் குற்றச்சாட்டை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில், கனடா நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன், ``கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்ட அமித் ஷா திட்டமிட்டுள்ளார்" எனத் தெரிவித்திருந்தார். அது உலக அரங்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி

இதற்கிடையில், Globe and Mail நாளிதழ் ஒர் அறிக்கையை வெளியிட்டது. அதில், ``கனேடிய பாதுகாப்பு அமைப்புகள் குறித்தும், கனடாவில் நடந்த வன்முறை சதித்திட்டங்களைப் பற்றியும் பிரதமர் மோடியும், இந்திய உள்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் ஆகியோர் அறிந்திருந்தார்கள் என நாங்கள் நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ``துரதிஷ்டவசமாக, குற்றவாளிகள் ஊடகங்களுக்கு உயர் ரகசியத் தகவல்களைக் கசியவிடுவதால், அது தொடர்பான தகவல்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதை நாங்கள் பார்க்கிறோம்.

அதனால்தான் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து நாங்கள் தேசிய விசாரணையை நடத்தினோம். அந்தத் தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிடும் எங்களின் அதிகாரிகள் குற்றவாளிகள் என்பதைவிட அவர்கள் நம்பகத்தன்மையற்றவர்கள் என்பதையே இது போன்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டுகிறது." எனக் குறிப்பிட்டார்.

ஜஸ்டின் ட்ரூடோ, நரேந்திர மோடி

இதற்கு முன்னர், கனடாவின் உளவுத்துறை ஆலோசகர் நதாலி ட்ரூயின், அரசு இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கனடா விவகாரத்தில் இந்தியப் பிரதமர் மோடி, அமைச்சர் ஜெய்சங்கர் அல்லது என்.எஸ்.ஏ தொடர்பு இருப்பதாக கனடா அரசு கூறவில்லை. அதற்கான ஆதாரங்கள் எதுவும் தற்போது இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் கனடா குறித்து வரும் தகவல்கள் ஊகமானவை, தவறானவை." எனக் குறிப்பிட்டிருந்தார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

Adani : `அதானி விவகாரம்; மோடியும் ஸ்டாலினும் மௌனம் காப்பது ஏன்?' - சீமான் கேள்வி!

சோலார் எனர்ஜி திட்ட ஒப்பந்த விவகாரத்தில் முதலீட்டைப் பெற அமெரிக்க முதலீட்டாளர்களை பொய் சொல்லி ஏமாற்றியதாகவும், அதற்காக இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் கௌதம் அதானி மீது அமெரி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு: `எதிர்க்கட்சிகள் இதை செய்தாக வேண்டும்...!' - திருமாவளவன் சொல்வதென்ன?

நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று மகா விகாஷ் கூட்டணி ஆட்சி அமைக்கும் அதே நேரம், எதிர்க்கட்சி கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைக... மேலும் பார்க்க

`கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு என்பது அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் இல்லை...' - கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாநாட்டில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், செய்தியாளரிடம் பேசும்போது, "மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக அதிகப்படியான வெற்றி பெற்று ... மேலும் பார்க்க

Modi: `காங்கிரஸால் இனி தனித்து ஆட்சியமைக்க முடியாது... அது ஒட்டுண்ணிக் கட்சி' - பிரதமர் மோடி காட்டம்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, ஏக்நாத் ஷ... மேலும் பார்க்க

`எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் ஆளுமைகள் இல்லாததால்தான் அதிமுக-வில் சலசலப்பு!' - கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், "மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியில் இருந்ததோ அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதிலி... மேலும் பார்க்க