போதைப்பொருள் வழக்கில் விடுவிப்பு; 25 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை திரும்பிய நடிகை ம...
Career: டிகிரி முடித்து 'இது' தெரிந்திருந்தால் போதும்! - சுப்ரீம் கோர்ட்டில் காத்திருக்கிறது வேலை!
சுப்ரீம் கோர்ட்டில் மூன்று பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
என்ன பணி?
கோர்ட் மாஸ்டர் (ஷார்ட் ஹேண்ட்), சீனியர் பெர்சனல் அசிஸ்டன்ட், பெர்சனல் அசிஸ்டன்ட்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 107 (கோர்ட் மாஸ்டர் - 31; சீனியர் பெர்சனல் அசிஸ்டன்ட் - 33; பெர்சனல் அசிஸ்டன்ட் - 43)
(இந்த எண்ணிக்கை தேவைக்கேற்ப அதிகரிக்கும் அல்லது குறையும்)
வயது வரம்பு: கோர்ட் மாஸ்டர் - 30 - 45; சீனியர் பெர்சனல் அசிஸ்டன்ட் மற்றும் பெர்சனல் அசிஸ்டன்ட் - 18 - 30
(சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
தகுதிகள்:
கோர்ட் மாஸ்டர்
சட்டத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் ஷார்ட் ஹேண்ட் அடிக்கும் வேகம் வேண்டும். கணினி அறிவு வேண்டும் மற்றும் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் அடிக்கும் வேகம் வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் இந்தப் பணியில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
சீனியர் பெர்சனல் அசிஸ்டன்ட்
பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் ஷார்ட் ஹேண்ட் அடிக்கும் வேகம் வேண்டும். கணினி அறிவு வேண்டும் மற்றும் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் அடிக்கும் வேகம் வேண்டும்.
பெர்சனல் அசிஸ்டன்ட்
பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் ஷார்ட் ஹேண்ட் அடிக்கும் வேகம் வேண்டும். கணினி அறிவு வேண்டும் மற்றும் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் அடிக்கும் வேகம் வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
டைப்பிங் ஸ்பீடு தேர்வு, ஷார்ட் ஹேண்ட் தேர்வு, எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு.
எங்கு தேர்வு நடைபெறும்?
தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 25, 2024.
விண்ணப்பிக்கும் இணையதளம்:cdn3.digialm.com
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.