`ஊதியம் கிடையாது' - போராட்டம் அறிவித்த அரசு ஊழியர்களுக்கு, தமிழ்நாடு அரசு எச்சரி...
Dhoni: ``43 வயதில் முதல் ஆளாக வந்து கடைசி ஆளாகச் செல்கிறார்" - தோனியின் உழைப்பைப் பாராட்டும் ஹர்பஜன்
ஐபிஎல் திருவிழா வரும் சனிக்கிழமை ஆரம்பிக்கவிருக்கிறது. இதில், ஐபிஎல்லின் அறிவிக்கப்படாத பிராண்ட் அம்பாசிடராக பல ஆண்டுகளாக விளங்கிவரும் சிஎஸ்கே வீரர் மகேந்திர சிங் தோனியின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர். அதிலும், இம்முறை 43 வயதில் அன்கேப்பட் பிளேயராக தோனி களமிறங்கவிருக்கிறார். இந்த நிலையில், மும்பை மற்றும் சென்னை அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், தோனியைச் சமீபத்தில் சந்தித்து உரையாடியது பற்றி பேசியிருக்கிறார்.

ஸ்போர்ட்ஸ் ஊடகம் ஒன்றிடம் இதனைப் பகிர்ந்த ஹர்பஜன் சிங், ``சமீபத்தில் நண்பரின் மகள் திருமணத்தில் அவரை (தோனி) சந்தித்தேன். மிகவும் ஃபிட்னஸாக இருந்தார். அப்போது, ``இந்த வயதில் என்ன செய்கிறீர்கள், கடினமாக இல்லையா" என்று அவரிடம் கேட்டேன். அதற்கு, ``கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால், இதுதான் எனக்குப் பிடித்த விஷயம். இதில்தான் மகிழ்ச்சியைக் காண்கிறேன். எனவே அதைச் செய்ய விரும்புகிறேன், விளையாடுகிறேன்" என்று அவர் கூறினார். அந்தப் பசி இருக்கும் வரை உங்களால் அதைச் செய்ய முடியும். மற்றவர்களை விடச் சிறப்பான அவர் ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறார்.
அவர் வெறுமனே வந்து விளையாடாமல், பந்துவீச்சாளர்களின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார். சென்னையில் தினமும் 2, 3 மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்கிறார். இந்த வயதிலும், முதல் ஆளாகக் களத்துக்கு வந்து கடைசி ஆளாக வெளியேறுகிறார். இதுதான் மற்றவர்களுக்கும் இவருக்கும் இருக்கும் வித்தியாசம். தோனியை விட வேகமான விக்கெட் கீப்பரை நான் பார்த்ததில்லை. ஸ்டம்புகளுக்கு பின்னால் அவர் நிற்கும்போது, பந்து அவரிடம் சென்றால் 10-ல் 9.5 முறை நீங்கள் அவுட்தான். அதை அவர் எப்படிச் செய்கிறார் என்றே தெரியவில்லை. அவர் மின்னல் வேகத்தில் செயல்படுகிறார்." என்று கூறினார்.

மேலும், இதே ஊடகத்திடம் பேசிய இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ``தோனி தனக்கு மிகவும் நேர்மையாக இருக்கிறார். ஏனெனில், பேட்டிங்கில் அவர் முன்வரிசையில் இறங்கி ஆட வேண்டும் என்று நாம் அனைவரும் கூறுகிறோம். ஆனால், அவ்வாறு இறங்கி 40 பந்துகள் ஆட முடியாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். தன்னால் என்ன முடியும், என்ன முடியாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்." என்று கூறினார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks