செய்திகள் :

Health Tips: தினமும் உப்புத்தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாமா?!

post image

கல் உப்பு சமையலுக்கு மட்டுமல்ல, கிருமிநாசினியாகவும் செயல்படும். அதனால்தான், தொண்டையில் கிருமித்தொற்று ஏற்பட்டால் வெந்நீரில் கல் உப்புப் போட்டு கொப்பளிக்கிறோம். இந்தக் கொப்பளித்தலை முறைப்படி எப்படி செய்வது என சொல்கிறார் சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.

வாய் துர்நாற்றம் I Bad Breath

''நமது உடலில் பொதுவாக நோய் ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியா (bacteria), வைரஸ் (virus) போன்ற நுண்ணுயிர்களை முற்றிலும் அழிக்கும் ஆற்றல் கல் உப்பிற்கு உண்டு. சமீபத்திய ஆய்வுகள் வெந்நீரில் கல் உப்புப் போட்டு வாய்க் கொப்பளித்தால், வாய் மற்றும் தொண்டையில் உள்ள கிருமிகள் நீங்குகின்றன என்று தெரிவித்திருக்கின்றன.

இந்தக் கொப்பளித்தல் முறைக்கு தூள் உப்பையோ, இந்துப்பையோ பயன்படுத்தக்கூடாது. கல் உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த உப்பில் மட்டுமே பல வகையான நுண்ணூட்டச்சத்துக்கள் இருக்கின்றன. எலும்புகள் வலுவாக இருக்க, மூளை ஆற்றல் மேம்பட இந்தச் சத்துக்கள் தேவை. வாய்க்கொப்பளித்தல் எப்படி செய்ய வேண்டுமென்றால், வாயில் வைத்தால் 'ஆ' என்று சொல்லக்கூடிய அளவில் வெந்நீர் சூடாக இருக்ககூடாது. சூடு பொறுக்கும் தன்மை ஒருவருக்கொருவர் மாறுபடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

செல்வ சண்முகம்

தினசரி வாய்ப் கொப்பளிப்பவர்கள் 200 மில்லி வெந்நீரில்ல் ஒரு சிட்டிகை கல் உப்புப் போட்டு பயன்படுத்தினாலே போதும். வாயில் துர்நாற்றம், தொண்டையில் தொற்று, பற்களிடையே ரத்தக்கசிவு இருந்தால் 200 மில்லி வெந்நீரில் அரை டீஸ்பூன் கல் உப்புப் போட்டு வாய்க் கொப்பளிக்க வேண்டும். உப்பின் அளவு கூடினால் வாயினுள்ளே இருக்கும் பிஹெச் அளவில் மாற்றம் ஏற்பட்டு, செரிமானத்தில் பிரச்னை வரும், கவனம்'' என்கிறார் செல்வ சண்முகம்.

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்:https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

Doctor Vikatan: சரும நிறத்தை மேம்படுத்த Glutathione மாத்திரையும் ஊசியும் உதவுமா?

Doctor Vikatan: சரும நிறத்தை மேம்படுத்தவும், கருமையைப் போக்கவும்குளுட்டோதயான் என்ற மாத்திரை உதவும் என்று ஒரு செய்தியில் படித்தேன். நான் மாநிறமாக இருப்பேன். எனக்கு இந்த மாத்திரை உதவுமா... எத்தனை நாள்கள... மேலும் பார்க்க

மரண தண்டனைவரை கொண்டு சென்றுள்ள 'ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்' - எச்சரிக்கும் மருத்துவர்

நமக்கெல்லாம் பலவித சிண்ட்ரோம்களைத் தெரியும். அவற்றில் ஒன்றான 'ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்' (shaken baby syndrome) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபருக்கு மரண தண்டனை தரும் அளவுக்கு காரணமாக அமைந்திருப்பது, இன்றை... மேலும் பார்க்க

மழைக்காலங்களில் அதிகரிக்கும் பஜ்ஜி, போண்டா லவ்... யாரெல்லாம் கவனமா இருக்கணும்?

தலைப்பை படித்ததுமே ’இந்த நேரத்துல இந்தக் கட்டுரை தேவையா’ என்று சிலர் டென்ஷன் ஆகலாம். ஆனால், பலரோட ஆரோக்கியத்துக்காக இதுபற்றி சொல்லியே ஆகணும். மழைக்காலங்களில் அத்தியாவசியமான பொருட்களை விற்பனை செய்யும் ... மேலும் பார்க்க

China: 'கோடியில் ஒரு தாய்' - இரட்டை கருப்பையுடன் ஆண், பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்!

வடமேற்கு சீனாவில் வசிக்கும் ஒரு பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று சர்வதேச செய்தியாகியிருக்கிறார். மிக மிக அரிதான இரட்டைக் கருப்பையுடன் ஒரு ஆண் குழந்தையையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றுள்ளதுதான் செய்... மேலும் பார்க்க