செய்திகள் :

Israel : `ஹெஸ்பொல்லா, மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டது' - ட்ரோன் தாக்குதலுக்கு நெதன்யாகு எச்சரிக்கை

post image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டில் ட்ரோன் தாக்குதல் முயற்சி நடந்ததாக செய்திகள் வெளியான நிலையில், ஹெஸ்பொல்லா 'மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டது' என்று எச்சரித்துள்ளார் நெதன்யாகு.

சனிக்கிழமை தொடங்கி தெற்கு பெய்ரூட், காசா பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தீவிரமான தாக்குதல்கள் நெதன்யாகு கொலை முயற்சிக்கு பதிலடியாக கருதப்படுகின்றன.

நெதன்யாகு மற்றும் அவரது மனைவி மீது கொலை முயற்சி நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில், "இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் எவரும் அதற்கு உரிய விலையைக் கொடுத்தேத் தீர வேண்டும்" என்றும் கடுமையாக பேசியிருக்கிறார்.

இஸ்ரேலின் சிசேரியா நகரில் உள்ள நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டதாக செய்திகாள் தெரிவிக்கின்றன.

நெதன்யாகுவின் எக்ஸ் தள பதிவில், "இன்று என்னையும் என் மனைவியையும் கொலை செய்ய இரானின் பினாமி (ஹெஸ்பொல்லா) எடுத்த முயற்சி மிகப் பெரிய தவறு.

இது நானோ, இஸ்ரேல் அரசோ எதிர்கால பாதுகாப்புக்காக எங்கள் எதிர்களுடன் போரிடுவதைத் தடுக்காது.

நான் இரானுக்கும் அதன் பினாமிகளுக்கும் தீய சக்திகளுக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். இஸ்ரேல் குடிமக்களை தாக்க முயற்சிக்கும் எவரும் அதற்காக மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்; நாங்கள் தொடர்ந்து தீவிரவாதிகளையும் அவர்களை அனுப்புபவர்களையும் அகற்றுவோம்; காசாவில் உள்ள பணயக் கைதிகளை வீட்டுக்கு அழைத்து வருவோம்; வடக்கு எல்லையில் வாழ்ந்த எங்கள் மக்களை மீண்டும் பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்புவோம். இஸ்ரேல் அதன் போர் நோக்கங்களை அடைவதில் உறுதியாக உள்ளது. வருங்கால தலைமுறையினருக்காக இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு யதார்த்தத்தை மாற்ற வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

காசாவில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு மறுநாள் (சனிக்கிழமை) இஸ்ரேல் பிரதமர் வீட்டின் அருகே ட்ரோன் தாக்குதல் முயற்சி நடைபெற்றதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த நேரத்தில் பிரதமரின் இல்லத்தில் பிரதமரும் அவரது மனைவியும் இருந்திருக்கவில்லை. பிரதமரின் வீட்டை நோக்கிச் சென்ற மூன்று ட்ரோன்கள் இடைமறித்து தடுத்து நிறுத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுவரை ஹெஸ்பொல்லாவோ அல்லது மற்ற ஆயுத அமைப்புகளோ ட்ரோன் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஹெஸ்பொல்லா ராணுவ தளத்தில் இஸ்ரேல் ராணுவம் போட்ட குண்டுகளால் குறைந்தது 35 பேர் மரணமடைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இன்னும் பெரிய அளவிலான தாக்குதலை மேற்கொள்ளக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல்: தமிழருக்கு மீண்டும் வாய்ப்பு; 99 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த பாஜக!

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு ஆளும் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்து ப... மேலும் பார்க்க

`மாவட்டத் தலைவர்கள் மாற்றம்?' - சத்தியமூர்த்தி பவனில் `புது' சலசலப்பு!

சொதப்பலில் முடிந்த நிர்வாகிகள் சந்திப்பு, பிசுபிசுத்துப் போன நடைப்பயணம் என தமிழக காங்கிரஸில் ஏற்கெனவே ஏகப்பட்ட சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில், 'தனது ஆதரவாளர்களை மாவட்ட தலைவர்களாக்க துடித்து வருகிறார்,... மேலும் பார்க்க

Train Accident : கவரப்பேட்டை ரயில் விபத்து ஒரு சதியா? - வெளியான `ஷாக்' தகவல்

திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே கடந்த 11-ம் தேதி கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து தர்பங்காவிற்கு செல்ல இருந்த ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில் விபத்திற்குள்ளாகி இருந்தது.லூப் லைனில் நின்று கொண்டிருந்... மேலும் பார்க்க

`ஒரு மொழியை படி, படிக்காதே எனச் சொல்ல இங்கு யாருக்கும் உரிமை இல்லை!' - விஜய பிரபாகரன் கூறுவதென்ன?

``எந்த மொழியும் குறைவானது அல்ல, அவரவருக்கு அவரவர் மொழி பெரியது, நாம் அனைத்து மொழியையும் கற்றறிய வேண்டும்" என தே.மு.தி.க விஜய பிரபாகரன் கூறியிருக்கிறார்.தே.மு.தி.க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ... மேலும் பார்க்க

Vijay: "வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று..." - தவெக தலைவரின் இரண்டாவது கடிதம்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்களுக்கான இரண்டாவது கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்.நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் ... மேலும் பார்க்க

India - Canada : மோசமடையும் இந்தியா - கனடா உறவு... இந்த விவகாரத்தில் லாரன்ஸ் பெயர் அடிபடுவது ஏன்?

லாரன்ஸ் பிஷ்னோய் என்றால் இன்றைக்கு பாலிவுட்டில் ஒரு அச்சம் ஏற்படும் அளவுக்கு நிலைமை உருவாகி இருக்கிறது. பஞ்சாப்பில் பாடகர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளால் அச்சத்தில் வாழ்கின்றனர். இப்போது அதே நிலையை... மேலும் பார்க்க