செய்திகள் :

Kanguva: சோலோவாக களமிறங்கும் கங்குவா; அசோக் செல்வன் படம் தள்ளிப்போகக் காரணமென்ன?

post image
நவம்பர் 14ஆம் தேதி சூர்யாவின் கங்குவா படம் வெளியாக இருக்கிறது.

அதேபோல அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படம் அதற்கு அடுத்த நாள் 15ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் தற்போது ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படத்தின் வெளியீட்டைப் படக்குழு தள்ளி வைத்திருக்கிறது. இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ திரைப்படத்தை வெள்ளிக்கிழமை நவம்பர்15 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தோம்.

‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’

தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையத்தின் காரணமாக இன்னும் ஒருவாரம் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில் திரைப்படத்தை வெளியிட்டால் வசூலில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என்ற அச்சத்தில் இப்படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழை நின்றதும் விரைவில் படம் வெளியிடப்படும்.

படத்தின் வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசோக் செல்வன் நடித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் எழுதி, இயக்கி இருக்கிறார். அவந்திகா நாயகியாக நடித்திருக்கிறார்.

கங்குவா

தயாரிப்பாளர் திருமலை இப்படத்தைத் தயாரிக்க எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதால் இந்த வாரத்தில் தமிழில் 'கங்குவா' மட்டும் ரிலீஸாக இருக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Inbox 2.0 Ep 9: Kanguva படம் பார்த்தவங்க இந்த வீடியோவையும் பாருங்க! | Cinema Vikatan

இன்பாக்ஸ் 2.0 எபிசோட் 9 இப்போது வெளிவந்துள்ளது.முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும். மேலும் பார்க்க

AR Rahman: `நண்பர்களே, முக்கியமான ஒன்றைப் பேச விரும்புகிறேன்' - ஏ.ஆர். ரஹ்மானின் பதிவு

இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர். ரஹ்மான், உலக நீரிழிவு தினத்தையொட்டி (நவம்பர் 14) விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.அந்தப் பதிவில், ``நண்... மேலும் பார்க்க

கங்குவா விமர்சனம்: சத்தியத்தைக் காக்கப் போராடும் சூர்யா; ஆனால் இந்தத் திரைக்கதையை யார் காப்பது?

இரண்டு காலவரிசையில் நடக்கும் கதையில் 2024-ம் ஆண்டில் குற்றவாளிகளை ரகசியமாகப் போலீசுக்குக் கண்டுபிடித்துத் தரும் 'பவுன்ட்டி ஹண்டராக' இருக்கிறார் பிரான்சிஸ் தியோடர் (சூர்யா). அதே நேரத்தில் இந்திய எல்லைப... மேலும் பார்க்க

Bloody Beggar: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை திருப்பிக் கொடுத்தாரா நெல்சன்? - உண்மையில் நடந்தது என்ன?

இயக்குநர் நெல்சன் தயாரிப்பில், கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பிளடி பெக்கர்' (Bloody Beggar). தீபாவளி வெளியீடாக வந்த இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு, அதனால் 7 கோடி ரூபாய் வரை நஷ்டம் ... மேலும் பார்க்க