``தமிழக அரசின் திருத்த மசோதா, உயர்கல்வியை தனியார்மயமாக்கும்'' - கல்வியாளர்கள் க...
Madhumitha: ``தீபாவளினாலே ரொம்ப ஸ்பெஷல் புது டிரஸ்தான்'' - நினைவுகளைப் பகிரும் நடிகை மதுமிதா
தமிழ் தொலைக்காட்சித் தொடர் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடர்களில் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல்.
இந்தத் தொடரின் முதல் பாகத்தில் ஜனனி என்ற கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை தொடரில் நடித்து வருகிறார்.
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த மதுமிதாவை தொடர்புகொண்டு சிறுவயது தீபாவளி அனுபவங்கள் குறித்துப் பேசினோம்.

``நான் ஸ்கூல் படிக்கும்போதெல்லாம் எந்த சோஷியல் மீடியாவுலயும் இல்லை. அதனால், எந்த அலட்டலும் இல்லாமல் புது டெரஸ் போட்டுட்டு, பட்டாசு வெடிச்சிட்டு, அப்பா அம்மா, சிஸ்டர்ஸ்னு ரொம்ப ஹாப்பியா இருந்தது.
அந்த தீபாவளி. எந்தக் கவலையும் இல்லாம காலையிலிருந்து நைட் வரைக்கும் பட்டாசு வெடிச்சிட்டே இருப்போம். இப்போ நான் சென்னையில் இருக்கேன். அப்பா அம்மா எல்லோரும் பெங்களூர்ல இருக்காங்க. இப்போ குடும்பப் பொறுப்பு, வேலையில் கவனம்னு பிசியாகிட்டோம். அதனால் முன்னமாதிரி இந்த தீபாவளியைக் கொண்டாட முடியல.
நாங்க லோயர் மிடில் கிளாஸ் ஃபேமிலி. அதனால் சின்னவயசுல தீபாவளிக்கு மட்டும்தான் புது டிரஸ் வாங்கி கொடுப்பாங்க. அதனால எங்களுக்கு தீபாவளினாலே ரொம்ப ஸ்பெஷல் புது டிரஸ்தான்.
அடுத்து எங்க வீட்ல இனிப்பு பலகாரமும், சாப்பாடும் ஸ்பெஷல். இயல்பாவே எங்க வீட்ல சாப்பாடு அல்டிமேட்டா இருக்கும். தீபாவளிக்கு சொல்லவே தேவையில்ல.
எனக்கு கர்நாடக மாநிலம் சிக்மங்ளூர்தான் சொந்த ஊர். எங்க பாட்டி இருந்த வரைக்கும் ஒவ்வொரு தீபாவளிக்கும் ஊருக்கு போயிடுவோம்.

நானும் அப்பா அம்மா என்னோட ரெண்டு சிஸ்டர்ஸ்னு 5 பேரும் ஒரே பைக்ல ஊருக்குப் போவோம். நம்ம சிட்டில இருக்குறமாதிரி இருக்காது. அங்க இருக்குற லைப் வேறமாதிரி இருக்கும்.
சித்தப்பா, பாட்டினு ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து தீபாவளி கொண்டாடுவோம்.
தீபாவளி அன்னைக்கு வீட்டுல சாமி கும்பிடுறது, வீட்டுல வளர்க்குற மாட்டுக்கு பூஜை செய்றது, எல்லோரும் சேர்ந்து சாப்பிடுறதுனு ஒட்டுமொத்தமா கோல்டன் பீரியட் அது. அதெல்லாம் இப்போ நினைச்சாலும் சந்தோஷமா இருக்கும்.
இது எல்லாத்தைவிட ஹைலைட்டு எங்க பாட்டி கொடுக்குற பட்டர் (வெண்ணெய்). வீட்டுலேயே பால் கறந்து, தயிராக்கி மோர் கடைந்து, வெண்ணெய் எடுத்து கொடுப்பாங்க.
எங்க பாட்டிகூட எனக்கு மறக்க முடியாத மெமொரினு சொல்லலாம். இப்போ பாட்டி இல்லை. அவங்களை ரொம்ப மிஸ் பண்றேன்.

பாட்டி இறந்ததுக்குப் பின்னாடி கிராமத்துக்குப் போறதே கம்மியாகிடுச்சு. இப்போ நான் சென்னைல இருக்கேன்.
ஒருவேளை இந்த தீபாவளிக்கு ஊர்ல இருந்திருந்தா அம்மா கையால நல்லா சாப்பிட்டு தூங்கி எழுந்திருப்பேன்.
என் சின்ன வயசு தீபாவளியை என் வாழ்க்கையில எப்போவும் மறக்கவே முடியாது." என்று தன்னுடைய நினைவுகளைப் பட்டாசாக பேசி முடித்தார் மதுமிதா.