செய்திகள் :

"MGR-க்கு பிறகு கூர்மையான வாள்; ஆனால் கையாள அண்ணா போன்ற போர்வீரன் இல்லை" - இயக்குநர் அமீர் சூசகம்

post image

மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் தயாரிப்பில், துருவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது.

விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் வரவேற்பை இப்படம் பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் அமீர் மதுரையில் படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், ``இதை நான் வெறும் சினிமாவாகக் கடந்து போகவில்லை. நம் சமூகத்தில் இருக்கிற பிரச்னைகளைப் பேசுகிற படமாக இருக்கு.

Bison \ பைசன்
Bison \ பைசன்

அது சரியாக வந்திருக்கிறது. ரசிகர்களிடம் வரவேற்பு இருப்பதைப் பார்க்கிறேன்.

எந்தச் சமூகத்தாரும் குறை சொல்லாத அளவுக்குப் படம் அமைந்திருப்பதை மிகப்பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன்" என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, ``அரசியலில் நடிகர்கள் வரும்போது அவர்களுக்கு ஆதரவாக நடிகர்கள் வருவார்களா?" என்று பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமீர், ``அப்படியெல்லாம் வரமாட்டார்கள். எம்.ஜி.ஆர் வரும்போது அவர் பின்னாடி எல்லா நடிகர்களும் வரவில்லை. விஜயகாந்த் வரும்போது அப்படி யாரும் வரவில்லை.

அவரவர் தனியாக வந்து அவரவர் அடையாளங்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். நடிகர்களும் சமூகத்தில் ஓர் அங்கம்தான்.

பெரும்பான்மையான மக்களின் அன்பைப் பெற்றவர்கள். அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நாம் சொல்லக்கூடாது.

அமீர்
அமீர்

லட்சோப லட்ச மக்களின் அன்பைப் பெற்ற எம்.ஜி.ஆரை அண்ணா ஒரு கருவியாக எடுத்துக்கொண்டார். அந்த வாளை எடுத்துக்கொண்டு அண்ணா என்ற போர்வீரன் ரொம்ப சரியாகப் பயன்படுத்தியதாக நான் பார்க்கிறேன்.

எம்.ஜி.ஆர் மூலமாக திராவிட சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தார். அந்த வீரன் சரியாக இருந்தார், அந்த வாளும் சரியாகப் பயன்படுத்தப்பட்டது.

அதேபோல ஒரு வாள் இப்போது கிளம்பியிருக்கிறது. எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஒரு கூர்மையான ஆயுதம் கிளம்பியிருக்கிறது.

ஆனால், அந்த வாளைப் பயன்படுத்துவதற்கான சரியான போர்வீரன் இல்லை என்பது என்னுடைய கருத்து. அந்த வாள் நல்லவர்கள் கையில் கிடைத்தால் நன்றாகப் பயன்படும். கெட்டவர்கள் கையில் கிடைத்தால் தவறாகத்தான் போகும்.

அந்தப் பலம் வாய்ந்த வாளை யார் பயன்படுத்தப்போகிறார்கள், நல்லவர்களா கெட்டவர்களா என்பதை 2026 தேர்தல் முடிவு செய்யும் என்று நினைக்கிறேன்" என்று அமீர் கூறினார்.

``1987-ல் கலைஞர் கைதானப்போ `கலைஞரின் நீதிக்கு தண்டனை' படம் எடுத்தேன்; இன்னைக்கு என் ரத்தம்..." - SAC

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனும், நடிகருமான விஜய் கடந்த 2024 பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியிருந்தார்.கட்சி ஆரம்பித்த ஒன்றரை ஆண்டில் இரண்டுமாநாடு, பரந்தூர்... மேலும் பார்க்க

Diwali Releases: `தீபாவளி டிரீட்' - இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படைப்புகள்

இந்தாண்டு தீபாவளி ரிலீஸுக்கு பல திரைப்படங்கள் ரேஸில் களமிறங்கி இருக்கின்றன. பண்டிகை தினங்களில் வெளியாகும் திரைப்படங்கள் எப்போதுமே ஸ்பெஷல்தான். இப்படி பண்டிகை தினங்களில் வெளியாகும் படங்களெல்லாம் முழுமை... மேலும் பார்க்க

"மணத்தி கணேசன் முதல்ல ஹாக்கி சாம்பியன்; பிறகுதான் கபடி" - ‘பைசன்’ நிஜ நாயகன் குறித்து உறவினர் பேட்டி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான ‘பைசன்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.திருச்செந்தூர் அருகேயுள்ள மணத்தி கிராமத்தில் பிறந்து கபடியில் சாதித்து அர்ஜுனா விருது வரை வாங்கி, தற்போது... மேலும் பார்க்க

Diesel Review: நல்லதொரு கருத்தினைப் பகிரும் `டீசல்', நல்லதொரு படமாக மைலேஜ் தருகிறதா?!

1979-ம் ஆண்டு வடசென்னை கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட கச்சா எண்ணெய் குழாய்கள் மீனவ சமூகத்தைக் கொதித்தெழச் செய்கிறது. ஆனால், அந்தப் போராட்டங்கள் காவல்துறை வன்முறையைக் கையாள, தோல்வியில் முடிகிறது. ஆனால்,... மேலும் பார்க்க