செய்திகள் :

Nobel: "எனக்கு கொடுங்கள் என்று நான் கேட்கவில்லை" - அமைதிக்கான நோபல் பரிசு குறித்து ட்ரம்ப் ப்ளீச்

post image

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். உலகம் முழுக்க நடந்த அல்லது நடக்க இருந்த 7 போர்களை தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதற்காக எனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன்பு காஸாவில் இஸ்ரேல் நடத்தி வந்த கொடூரமான தாக்குதலை நிறுத்தி விட்டதாக அறிவித்தார்.

இரண்டு ஆண்டுகளாக காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தார்மீக ஆதரவு கொடுத்துவிட்டு இப்போது அதே அமெரிக்கா, இஸ்ரேலிடம் போரை நிறுத்துங்கள் என்று சொல்லி இருக்கிறது.

Donald trump
Donald trump

இஸ்ரேலும் போரை நிறுத்துவதாக அறிவித்ததோடு, போரை நிறுத்தப் பாடுபட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பரிந்துரைத்தார்.

இரண்டு பேரும் சேர்ந்து ஒரு நாட்டை மண்ணோடு மண்ணாக மாற்றிவிட்டு இப்போது அவர்களே போரை நிறுத்திவிட்டோம் என்று கூறி நோபல் பரிசு கொடுங்கள் என்று கேட்பதாக இஸ்லாமிய நாடுகள் குற்றம் சாட்டின. ஆனாலும் டொனால்டு ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை.

அவருக்குப் பதில் வெனிசுலாவில் ஜனநாயகத்திற்காகப் பாடுபட்ட அந்நாட்டு பெண் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசைப் பெற்ற பிறகு மரியா கொரினா மச்சாடோ தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ''இந்த பரிசைப் பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களுக்கும், எங்களது நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கும் அர்ப்பணிக்கிறேன். இன்று நாங்கள் வெற்றியின் வாசலில் இருக்கிறோம்.

எப்போதும் விட அதிகமான சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் அடைய ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க மக்கள், லத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் உலக ஜனநாயக நாடுகள் எங்களுக்கு முக்கிய உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

நோபல் பரிசு வழங்கிய குழுவினர் வெளியிட்ட செய்தியில், "வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்கும், நியாயமான மற்றும் அமைதியான வழியில் சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கான மாற்றத்தை அடைவதற்கும் மரியா கொரினா மச்சாடோவின் அயராத உழைப்பைப் பாராட்டுகிறோம்'' என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வெனிசுலா தேர்தலில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ வாக்குகளைத் திருடிக்கொண்டதாகக் குற்றம் சாட்டிய அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ கடந்த ஒரு ஆண்டாகத் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். வெனிசுலா தேர்தலில் போட்டியிட மரியா கொரினா மச்சாடோவுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தனது ஆதரவாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்பிடம் பேசிய மரியா கொரினா மச்சாடோ

நோபல் பரிசு வென்ற மரியா அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் போனில் பேசினார். இது குறித்து டொனால்டு ட்ரம்ப் இன்று அளித்த பேட்டியில், ''நோபல் பரிசு பெற்றவர் இன்று என்னை அழைத்து, 'உங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்; ஏனென்றால் நீங்கள் உண்மையிலேயே அதற்குத் தகுதியானவர்' என்று கூறினார். ஆனால், எனக்கு நோபல் பரிசு கொடுங்கள் என்று நான் சொல்லவில்லை. அவர் சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

நான் அவருக்குப் பல சந்தர்ப்பங்களில் உதவி செய்தேன். செய்து கொண்டிருந்தேன். பேரழிவின் போது வெனிசுலாவில் அவர்களுக்கு நிறைய உதவி தேவைப்பட்டது. கோடிக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றியதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்'' என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

டொனால்டு ட்ரம்ப் பெயர் அடுத்த ஆண்டு நோபல் பரிசுக்குப் பரிசீலிக்கப்படலாம் என்று நோபல் பரிசு கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மதுரை: ”எங்களுக்குச் சிரித்துப் பேசவும் தெரியும்; கடித்துப் பேசவும் தெரியும்” - நயினார் நாகேந்திரன்

’தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் பிரசாரப் பயணத்தை மதுரையில் இன்று தொடங்கினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். மதுரை அண்ணாநகரில் இன்று நடைபெற்ற இதன் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பாஜக... மேலும் பார்க்க

டெல்லி: ``செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்குத் தடையா?'' - தாலிபான் தரப்பு மறுப்பு

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பிணைய கைதிகளை நாளை விடுவிக்கும் ஹமாஸ்: காஸாவிலிருந்து வெளியேற, ஆயுதங்களை கீழே போட மறுப்பு

பிணைய கைதிகள்பாலஸ்தீனத்தின் காசா நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ப... மேலும் பார்க்க

பீகார் சட்டமன்றத் தேர்தல்: முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு? வெல்லப்போகும் கூட்டணி? - கருத்துக்கணிப்பு

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேத... மேலும் பார்க்க

`வெற்றிகரமாக முடிந்தது' - பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி தந்த ஆப்கானிஸ்தான்; காரணம் என்ன?

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் தாக்குதல் வெடித்துள்ளது. வியாழக்கிழமை நடந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 9), ஆப்கானிஸ்தான்... மேலும் பார்க்க

Nobel: இஸ்ரேலை ஆதரித்தவருக்கு அமைதிக்கான நோபல் பரிசா? - குவியும் கண்டனங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என வெளிப்படையாக டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனாலும் டொனால்டு ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடை... மேலும் பார்க்க