செய்திகள் :

Royal Enfield Ev : சத்தமில்லாத எலெக்ட்ரிக் புல்லட் வருது; பைக் பேர் என்ன தெரியுமா?

post image
ராயல் என்ஃபீல்டு புல்லட்களின் ஸ்பெஷலே அந்த ‛பட் பட் டுப் டுப்’ சத்தம்தான். அது இல்லாத புல்லட்களை எதிர்பார்க்க முடியுமா தெரியவில்லை. ஆனால், சத்தமே போடாத டூவீலர்களைக் கொண்டு வரப் போகிறது ராயல் என்ஃபீல்டு.

அட ஆமாங்க; எலெக்ட்ரிக் தயாரிப்பில் இறங்கப் போகிறது… இல்லை இறங்கிவிட்டது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இதை தனது இன்ஸ்டா மற்றும் வலைதளப் பக்கங்கள் மூலமும் உறுதிப்படுத்தி விட்டார்கள். 

(@royalenfieldev) என்கிற இந்த இன்ஸ்டா பக்கத்தை, இப்போதுதான் சுடச்சுட ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரே ஒரு போஸ்ட்தான் இருக்கிறது. பறக்கும் பலூன், பிரபஞ்சம், விண்கல், பூமி என்று பலதரப்பட்ட விஷயங்கள் அந்த வீடியோவில் வருகின்றன. விண்வெளியில் ஒரு பைக் பறந்து, கடைசியில் பாராசூட் மூலம் அந்த பைக் விடப்படுகிறது.

Royal Enfield Electric Instagram Page

வீடியோவின் கடைசியில் Drop - 4 -11- 2024 என்று குறியீட்டில் ஏதோ சொல்லப்படுகிறது. அதாவது - இந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி ஒரு எலெக்ட்ரிக் டூவீலர் வரப்போகிறது என்று அர்த்தம்.

அதேபோல், (https://www.royalenfield.com/in/en/electric-vehicles/) என்கிற வலைதளத்தையும் நோட்டம் விட்டேன். அதில் A New Chapter for the Future என்கிற வாசகம் இருக்கிறது. கீழே ஹிமாலயன் பைக் டெஸ்ட் செய்யப்படுவது போன்ற படமும் நம்மைக் கொஞ்சம் ஹைப் ஏற்றுகிறது. ஒருவேளை - ஹிமாலயன் பைக்தான் எலெக்ட்ரிக்கில் வரப் போகுதா என்கிற ஆர்வம் உங்களைப்போலவே எனக்கும் இருக்கிறது. இதை உறுதிப்படுத்துவதுபோல் எலெக்ட்ரிக் ஹிமாலயன் என்கிற வார்த்தையையும் பயன்படுத்தி இருக்கிறது ராயல் என்ஃபீல்டு. 

Royal Enfield Electric website

சில மாதங்களுக்கு முன்பு ராயல் என்ஃபீல்டு CEO கோவிந்தராஜன், மோட்டார் விகடனின் நேர்காணலின்போது இந்தத் தகவலைச் சொல்லியிருந்தார். அது இப்போது உண்மையாகப் போகிறது. 

ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இப்போது 2 எலெக்ட்ரிக் ஆர்க்கிடெச்சர்களில் வேலை பார்ப்பதாகத் தெரிகிறது. இதில் ஒரு ப்ளாட்ஃபார்ம், முற்றிலும் நம் ஊர்த் தயாரிப்பாக வரப் போகிறது. இரண்டாவது ப்ளாட்ஃபார்ம், ஐரோப்பாவைச் சேர்த்த Stark Future எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் வைத்துக் கொண்டு வரப் போகும் ஆர்க்கிடெக்ச்சர். 2022-ல் ஏற்கெனவே இந்த நிறுவனத்துடன் பல கோடி மதிப்பில் முதலீடு செய்துள்ளதாம் ராயல் என்ஃபீல்டு.

தொழில்நுட்பம், தயாரிப்பு, R&D, உதிரிபாகங்கள் என்று பல விஷயங்களில் இந்த பார்ட்னர்ஷிப் தொடரும். இப்போதைக்கு இந்த இ பைக்குகள் L எனும் ப்ளாட்ஃபார்மில் கீழ் ரெடியாகும். பைக்கின் ஸ்டைல், நியோ ரெட்ரோ டிசைன் கொண்டிருக்கும்.

இப்போது இந்திய மார்க்கெட்டுக்காக Flying Flea எனும் பைக் பெயருக்கு ட்ரேட்மார்க் செய்து பதிந்து வைத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு.

Govindarajan

இந்த 2 ப்ளாட்ஃபார்ம்களிலும் சேர்த்து பல வகையான தயாரிப்புகளைக் களம் இறக்கக் காத்திருக்கிறது RE. இதில் ஒரு டூவீலர், ப்ரோட்டோடைப் மாடலில்… அதாவது விற்பனைக்கு வருவதற்கு முந்தைய கான்செப்ட் மாடலில் ரெடியாக இருக்கிறதாம். உதிரிபாகங்கள் சப்ளையில் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக, 10-க்கும் மேற்பட்ட உதிரி பாக வெண்டார்களுடனுடனும் பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. 

ஓகே! இப்போது முதல் பாராவுக்கு வரலாம். ஆம், ராயல் என்ஃபீல்டு என்றாலே அந்த ‛டப் டப்’ சத்தம்தானே! தூரத்தில் வருவதைக் கேட்டே - அது ராயல் என்ஃபீல்டு புல்லட் என்று பைக்கைப் பார்க்காமலே சொல்லிவிடலாம். ஆனால், எலெக்ட்ரிக்கில் இந்த வைப் கிடைக்காதே என்று ஆர்வலர்கள் வருத்தப்படுவார்களே! அதை எப்படிச் சரிக்கட்டப் போகிறது RE? 

ஒருவேளை - ராயல் என்ஃபீல்டு, இந்த Thump குறையக் கூடாது என்பதற்காக, ஸ்பீக்கர்கள் எதுவும் பயன்படுத்துமோ என்பதும் தெரியவில்லை. ஆனால், அது நிறைவான அனுபவமாக இருக்காது என்றும் கருத்து சொல்லப்படுகிறது. பார்ப்போம். நவம்பர் 4 வரை பொறுத்திரு மனமே!

Ola:‛டெலிவரி கிடைக்கல; வண்டி சரியில்ல; சர்வீஸ் ஒழுங்கா பண்ணல’-இதுவரை 10,644 புகார்கள்; பதில் என்ன?

‛‛ஓலா ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் பாவம் செய்தவர்கள்; அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க!’’ என்று ஓலாவைப் பார்த்து ஸ்டாண்ட் அப் காமெடி நடிகர் குணால் கம்ரா தொடங்கி வைத்த ஏழரை, ஓலாவுக்குக் கழுத்தைச... மேலும் பார்க்க